
ஓம் நமசிவாய
The Next Song will be automatically played at the end of each song.
Tandhiram
Padhigam
- விநாயகர் வணக்கம்
- முதல் தந்திரம் - பாயிரம்
- முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்
- முதல் தந்திரம் - 2. வேதச் சிறப்பு
- முதல் தந்திரம் - 3. ஆகமச் சிறப்பு
- முதல் தந்திரம் - 4. உபதேசம்
- முதல் தந்திரம் - 5. யாக்கை நிலையாமை
- முதல் தந்திரம் - 6. செல்வம் நிலையாமை
- முதல் தந்திரம் - 7. இளமை நிலையாமை
- முதல் தந்திரம் - 8. உயிர் நிலையாமை
- முதல் தந்திரம் - 9. கொல்லாமை
- முதல் தந்திரம் - 10. புலால் மறுத்தல்
- முதல் தந்திரம் - 11. பிறன்மனை நயவாமை
- முதல் தந்திரம் - 12. மகளிர் இழிவு
- முதல் தந்திரம் - 13. நல்குரவு
- முதல் தந்திரம் - 14. அக்கினி காரியம்
- முதல் தந்திரம் - 15. அந்தணர் ஒழுக்கம்
- முதல் தந்திரம் - 16. அரசாட்சி முறை
- முதல் தந்திரம் - 17. வானச் சிறப்பு
- முதல் தந்திரம் - 18. தானச் சிறப்பு
- முதல் தந்திரம் - 19. அறஞ்செய்வான் திறம்
- முதல் தந்திரம் - 20. அறஞ்செயான் திறம்
- முதல் தந்திரம் - 21. அன்புடைமை
- முதல் தந்திரம் - 22. அன்பு செய்வாரை அறிவன் சிவன்
- முதல் தந்திரம் - 23. கல்வி
- முதல் தந்திரம் - 24. கேள்வி கேட்டமைதல்
- முதல் தந்திரம் - 25. கல்லாமை
- முதல் தந்திரம் - 26. நடுவு நிலைமை
- முதல் தந்திரம் - 27. கள்ளுண்ணாமை
Paadal
-
1. இலைநல வாயினும் எட்டி பழுத்தால்
குலைநல வாங்கனி கொண்டுண லாகா
முலைநலங் கொண்டு முறுவல்செய் வார்மேல்
விலகுறு நெஞ்சினை வெய்துகொள் ளீரே.
-
2. மனைபுகு வார்கள் மனைவியை நாடில்
சுனைபுகு நீர்போற் சுழித்துடன் வாங்கும்
கனவது போலக் கசிந்தெழும் இன்பம்
நனவது போலவும் நாடவொண் ணாதே.
-
3. இயலுறும் வாழ்க்கை இளம்பிடி மாதர்
புயனுறப் புல்லிப் புணர்ந்தவர் எய்தும்
மயலுறும் வானவர் சார்விது என்பார்
அயலுறப் பேசி அகன்றொழிந் தாரே.
-
4. வையகத் தேமட வாரொடுங் கூடியென்
மெய்யகத் தோருளம் வைத்த விதியது
கையகத் தேகரும் பாலையின் சாறுகொள்
மெய்யகத் தேபெறு வேம்பது வாமே.
-
5. கோழை ஒழுக்கங் குளமூடு பாசியில்
ஆழ நடுவார் அளப்புறு வார்களைத்
தாழத் துடக்கித் தடுக்ககில் லாவிடில்
பூழை நுழைந்தவர் போகின்ற வாறே.
-
6. கொலையே களவுகள் காமம் பொய்கூறல்
மலைவான பாதக மாம்அவை நீக்கத்
தலையாம் சிவனடி சார்ந்தின்பஞ் சார்ந்தோர்க்
கிலையாம் இவைஞானா னந்தத் திருத்தலே.