
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 12. மகளிர் இழிவு
பதிகங்கள்

இலைநல வாயினும் எட்டி பழுத்தால்
குலைநல வாங்கனி கொண்டுண லாகா
முலைநலங் கொண்டு முறுவல்செய் வார்மேல்
விலகுறு நெஞ்சினை வெய்துகொள் ளீரே.
English Meaning:
EVIL WOMEN IS IGNOMINYPledge not Your Heart to Lust
Fine though the leaves be of the nux vomica tree,
Its wealth of fruit is bitter on tongue, unfit to eat;
To them with rounded breasts and luring smile,
Pledge not your wavering heart in passion`s heat.
Tamil Meaning:
இலை, தளிர் முதலியவற்றால் கண்ணைக் கவர்கின்ற எட்டிமரம், பின் பழம் பழுத்து அதனால் மேலும் கருத்தைக் கவரு மாயினும், குலைமாத்திரத்தால் நல்லனவாய்த் தோன்றுகின்ற அதன் கனிகளைப் பறித்துண்டல் மக்கட்குத் தீங்குபயப்பதாம். அதுபோல உறுப்பழகுகளால் கண்ணைக் கவர்கின்ற பொது மகளிர், பின் பொய்ந் நகை காட்டி அதனால் மேலும் கருத்தைக் கவர்வாராயினும், நகைப்புமாத்திரத்தால் அன்புடையராய்த் தோன்று கின்ற அவரது இன்பத்தினை நுகர்தல், அறம் பொருள்களை விரும்பி நிற்கும் நன்மக்கட்குக் கேடுபயப்பதாகும். ஆதலின், அவ்வாறு நன் னெறியை விட்டு விலகிச் செல்கின்ற மனத்தைத் தீங்கு தேடுவதாக அறிந்து அடக்குவீராக.Special Remark:
எடுத்துக்காட்டுவமைக்கு ஏற்ற பொருள்கள் இசையெச்சமாய் நின்றமையின், அவை விரித்துரைக்கப்பட்டன. `வெய்தாக` என ஆக்கம் வருவித்து உரைக்க. இதனால் வரைவின் மகளிரை அவரது வடிவழகு பற்றியும், பொய்ச்செயல் பற்றியும் விரும்புவார், பின் தீங்குறுவர் என்பது கூறப்பட்டது.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage