
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 12. மகளிர் இழிவு
பதிகங்கள்

மனைபுகு வார்கள் மனைவியை நாடில்
சுனைபுகு நீர்போற் சுழித்துடன் வாங்கும்
கனவது போலக் கசிந்தெழும் இன்பம்
நனவது போலவும் நாடவொண் ணாதே.
English Meaning:
Incontinent Passion Spells RuinThe worldly folk who seek connubial delights
Are, like eddying water, sucked into whirling pool;
Such is passion, incontinent, fleeting as a dream;
Real it is not; let not its siren spell you befool.
Tamil Meaning:
இல்லறநெறியில் நிற்கக் கருதுவார்க்குத் தம் மனைவியது இன்பத்தை நினைக்கும்பொழுது சுனையில் உள்ள நீர், மூழ்குவார்க்குத் தண்ணிதாய்த் தன்னினின்று மீளாதவாறு தன்னுள் ஆழ்த்திக்கொள்வதுபோல இருவர்க்கும் அரும்பெறல் இன்பமாய் அவரைப் பிரியாவகைச் செய்யும். அந்நெறியில் நிற்கக் கருதாத பிறர்க்குப் பொது மகளிர் இன்பம் கனவில் பெறும் இன்பம்போல அவர் தம் உள்ளத்தில் மட்டும் சிறிது அரும்பிப் பின் மறைந்தொழியும். அதனால், பொது மகளிரது இன்பத்தை உண்மை என்று நினைத்தலும் கூடாது.Special Remark:
மனை, மனைவி ஆகுபெயர்கள். முன்னர், ``மனை புகுவார்கள்`` என்றும், ``மனைவியை நாடில்`` என்றும் கூறினமை யால், பின்னர், `பிறர்` என்பதும் பொதுமகளிரை நாடில் என்பதும் பெறப்பட்டன. உண்மையை, ``நனவு`` என்றார் உண்மையாகாமை யின், `போல` என்றார். உம்மை, மாற்றி உரைக்கப்பட்டது. அற நெறி யில் நிற்கும் ஆடவர் தம் மனைவியரைப் பிரிய மாட்டாமையை அகத் திணையுள், செலவழுங்கல், இடைச்சுரத் தழுங்கல் முதலிய துறை களில் வைத்து இனிது விளங்கப்பாடுவர் நல்லிசைப் புலவர்.இதனால், பொது மகளிரது உள்ளத்து அன்பின்மை கூறப் பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage