
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 12. மகளிர் இழிவு
பதிகங்கள்

வையகத் தேமட வாரொடுங் கூடியென்
மெய்யகத் தோருளம் வைத்த விதியது
கையகத் தேகரும் பாலையின் சாறுகொள்
மெய்யகத் தேபெறு வேம்பது வாமே.
English Meaning:
Sweet Beginning, Bitter End``What are the joys that in woman`s charms we seekor find?``
The truly wise of heart pronounce thus their course;
``In the hand like the sugary juice from crushing mills,
But in the body bitterer than bitterest neem.
Tamil Meaning:
நிலவுலகத்தில் வாழும்பொழுது மகளிரோடும் கூடிப்பெறுவது யாதும் இல்லை. ஆயினும், உடம்பொடு கூடி நிற்பாரது உள்ளத்தில் ஊழ் கூட்டிய ஒரு மயக்கமே அக்கூட்டத்தின்கண் உளதாய விருப்பம். இன்னும் அவ்விருப்பம், கையிலே கிடைத்த கருப்பஞ்சாறு போன்ற சிவானந்தத்தை உடைய மக்களுடம்பில் ஒருபக்கம் வைக்கப் பட்ட வேம்பு போல்வதுமாகும்.Special Remark:
``கூடி என்`` என்றது, அவ்வின்பம் கணத்தில் அழியும் சிற்றின்பமாதலேயன்றிப் பின்னரும் பல இடர்விளைத்தல் பற்றியாம். விதியின் பயனாகிய காரியத்தை, ``விதி`` எனக் காரணமாக்கிக் கூறினார். ``சாறுகொள்`` என்றது ஒட்டணி. ``வைத்த விதி`` எனவும், ``வேம்பதுவாம்`` எனவும் கூறியவாற்றால், அவ் வின்பத்தை அறம் பொருள்கட்குத் துணையாக அமைந்த மனைவியிடத்து நுகர்தலோடு ஒழியாது, அறத்தோடும், பொருளோடும் சிறிதும் இயைபில்லாத பொதுமகளிடத்தும் நுகர விரும்புதல் பெரும் பேதைமைத்து என்றவாறாம்.இதனால், `பொதுமகளிரது இன்பம் வேண்டத்தகாத தொன்று` என்பது கூறப்பட்டது. இத்திருமந்திரம், காமவின்பத்தினை முற்ற விலக்கும் நோக்குடைத்தாதலும் அறிக.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage