
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 12. மகளிர் இழிவு
பதிகங்கள்

கொலையே களவுகள் காமம் பொய்கூறல்
மலைவான பாதக மாம்அவை நீக்கத்
தலையாம் சிவனடி சார்ந்தின்பஞ் சார்ந்தோர்க்
கிலையாம் இவைஞானா னந்தத் திருத்தலே.
English Meaning:
Shun Sinful LivingKilling, thieving, drinking, lusting, lying—
These horrid sins detest and shun; to those
Who Siva`s Holy Feet attain and the Bliss eternal,
They come not; such men in Wisdom`s bliss ever repose.
Tamil Meaning:
`பிற உயிரைக் கொல்லுதல், பிறர் பொருளைக் களவு செய்தல், கள்ளுண்டல், நெறிநீங்கிய காமத்து அழுந்தல், பொய் கூறல்` என்னும் இவை ஐந்தும், `பேரறக் கடை - மாபாதகம்` என வேறு வைத்து எண்ணப்படும். ஆகவே, அவைகளை அறவே நீக்காதவழி மேற்கதி உண்டாகாது. சிவனடியை அடைந்து அவனது இன்பத்தைப் பெற்றவர்க்கு இவை உண்டாக வழியில்லை. அவனது அருள் இன்பத்தில் ஆழ்ந்திருத்தல் ஒன்றே அவர்க்கு உளதாம்.Special Remark:
மலைவு, அறத்திற்கு நேர்மாறாதல், எனவே, `பெருந் தீவினை` என்றவாறாம். இவற்றை, `பஞ்ச மாபாதகம்` என்பர். `அவை நீக்கி` என்பது பாடம் அன்று. தலையாயதனை, `தலை` என்றார். ஆம் - உண்டாகும். ``அவை நீக்கத் தலை ஆம்`` என்றதற்குக் கருத்து நோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது. ``இலையாம்`` என்றதில் ஆம், அசைநிலை. இறுதிக்கண், `உளதாம்` என்பது சொல்லெச்சம். ``இன்பம் சார்ந்தோர்க்கு`` என்றது, கொலை முதலியன தோன்றாமைக்கு ஏது உணர்த்தற்பொருட்டும், ``ஞானானந்தத்திருத்தல்`` என்றது, அவையே யன்றிப் பிற தீங்கு நலங்களுள் யாதொன்றும் இல்லை என்பது உணர்த்தற்குமாம். எனவே, `சிவனடியைச் சாராதவழி இவற்றை முற்றக்கடிதல் இயலாமையின், அவற்றை அடைதலே தக்கது` என்பதும், `அவற்றை அடைந்தவழித் தீமை நீங்குதலேயன்றி, நன்மை பெருகுதலும் உளவாம்` எனவும் கூறியவாறாயிற்று.இதனால், `பெரிதும் குறிக்கொண்டு கடியத்தக்க பெருங் குற்றங்கள் இவை` என மேற்போந்தவைகளைத் தொகுத்துக் கூறி, அவற்றை முற்றக் கடிதற்கு வழியும் கூறப்பட்டது. களவையும், பொய் கூறலையும் வழிமொழிதல் வகையாற் கூறினார் எனவும் கள் உண்டலை எதிரது போற்றிக் கூறினார் எனவும் கொள்க. பின்னர் வரும் வாய்மை பொய் கூறாமையாகாது வேறாதல் அறிக. இதனானே, இத்திருமந்திரம் இவ்விடத்ததாதலும், `புலால் மறுத்தலின்` கண்ணது ஆகாமையும் அறிந்துகொள்க.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage