ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. தூலப் பிரணவம் சொரூபானந்தப் பேருரை
    பாவித்த சூக்குமம் மேலைச் சொரூபப் பெண்
    ஆலித்த முத்திரை ஆங்கதிற் காரணம்
    மேலைப் பிரணவம் வேதாந்த வீதியே.
  • 2. ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
    ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
    ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
    ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே.
  • 3. ஓங்காரத் துள்ளே உதித்தஐம் பூதமும்
    ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம்
    ஓங்காரா தீதத்(து) உயிர்மூன்றும் உற்றன
    ஓங்கார சீவன் பரசிவ னாகுமே.
  • 4. வருக்கம் சுகமாம் பிரமமு மாகும்
    அருக்கச் சராசரம் ஆகும் உலகில்
    தருக்கிய ஆதார மெல்லாந்தன் மேனி
    சுருக்கமில் ஞானம் தொகுத்துணர்ந் தோர்க்கே.
  • 5. மலையுமனோ பாவம் மருள்வன வாவ
    நிலையின் தரிசனம் தீப நெறியாம்
    தலமும் குலமும் தவம் சித்த மாகும்
    நலமும் சன் மார்க்கத் துபதேசந் தானே.
  • 6. சோடச மார்க்கமும் சொல்லும்சன் மார்க்கிகட்(கு)
    ஆடிய ஈராறின் அந்தமும் ஈரேழில்
    கூடிய அந்தமும் கோதண்ட மும்கடந்(து)
    ஏறிய ஞானஞே யாந்தத் திருக்கவே.