
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 3. பிரணவ சமாதி
பதிகங்கள்

சோடச மார்க்கமும் சொல்லும்சன் மார்க்கிகட்(கு)
ஆடிய ஈராறின் அந்தமும் ஈரேழில்
கூடிய அந்தமும் கோதண்ட மும்கடந்(து)
ஏறிய ஞானஞே யாந்தத் திருக்கவே.
English Meaning:
Ascending Order to Finite Goal WithinTo vision the Sixteen-Petalled Centre within is Shodasa
It is the Way of Sanmargis;
Beyond is the end of Nine centres,
Still beyond is Pranava
Ascending further beyond is the End Finite,
Of Jnana (Knowledge) and Jneya (Known) in one.
Tamil Meaning:
ஞானத்தை அடைதற்குரிய வழியை அடைய விரும்புவோர்கட்கு, அவர்கள் ஆதாரயோகத்தின் முடிநிலையாகிய புருவ நடுவையும் கடந்து மேல் ஏறி ஏழாந்தானத்தை அடைந்து உணர்ந்த ஞானத்தினால் நிராதாரத்தையும் கடந்துள்ள ஞேயமாகிய சிவத்திற் சென்று அடங்கியிருத்தற்பொருட்டு, `பன்னிருகலை, பதினாறுகலை` என்று பிராசாத யோகங்களைப் பதினான்கு வித்தைகளின் முடிவாகிய பிராசாத நூல்கள் கூறும்.Special Remark:
`சன்மார்ககிகட்கு. கோதண்டமும் கடந்த ஏறிய ஞானத்தால் ஞேயமாகிய அந்தத்து இருக்க, சோடசத்தையும், ஈராறையும் ஈரேழில் கூடிய அந்தமும் சொல்லும்` என இயைத்துக் முடிக்க. ஆடிய - முன்னோர் பயின்ற இது தாப்பிசையாய். `சோடச மார்க்கம்` என்பதனோடும் சென்றியைந்தது.புருவநடு ஆதார யோகத்தின் முடிநிலை இடமாகலின் ``கோதண்டமும்`` என்னும் உம்மை சிறப்பு ஏறிய ஞானம் - ஏறியதனால் விளைந்த ஞானம். `ஞானத்தால்` என உருபு விரிக்க. ஞேய அந்தம் - ஞேயமாகிய அந்தம். இதுவே பிராசாத யோக முடிநிலை இடமாதலின் ``அந்தம்`` எனப்பட்டது.
பதினான்கு வித்தைகளாவன வேதம் நான்கு, வேதாங்கம் ஆறு, உபாங்கம் நான்கு இவற்றுடன் உபவேதம் நான்கு கூட்டி, `பதினெண் வித்தை` என்றலும், உபவேதம் நீக்கி, ``பதினான்கு வித்தை`` என்றலும் ஆக இரு வழக்குக்கள் உள்ளன. அவற்றுள் பின்னதை இங்குக் கூறினார்.
``ஈரேழிற் கூடிய அந்தமும்`` என்னும் உம்மை முற்றும்மை. அந்தத்தின் பொருளை ``அந்தம்`` என்றது ஆகுபெயர். பின்னர் அப்பொருளைக் கூறும் நூலை ``அந்தம்`` என்றது இருமடியாகு பெயர். ஈற்றடி உயிரெதுகை பெற்றது.
இதனால், `ஞானத்தைப் பெறவேண்டினார்க்குச் சிறந்த வழியாவது பிரணவ யோகமே` என்பது கூறி முடிக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage