
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 3. பிரணவ சமாதி
பதிகங்கள்

ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே.
English Meaning:
Greatness of AumAum is the one Word Supreme;
Aum is the Form-Formless;
Aum is the Infinite Diversity;
Aum is Siddhi and Mukti radiant.
Tamil Meaning:
வேதாந்த சித்தாந்த ஞான குரவர்கள் ஒரு வார்த்தையாகச் சொல்லுகின்ற உபதேச மொழிகளும், சிவன் கொள்ளு கின்ற உருவம், அருவம். அருவருவம் என்கின்ற மூவகைத் திருமேனி களும், பலவகை மொழிகளும் ஆகிய எல்லாம் `ஓம்` என்பதாகிய பிரணவத்தில் உள்ளனவேயாம். அதனால் பிரணவயோகத்தால் சித்தி முத்திகள் யாவும் கிடைக்கும்.Special Remark:
`சொல்லுலகங்கள் யாவும் பிரணவத்தின் காரியமே` என்பதாம். ஓங்காரம் நான்கும் `பிரணவம்` என்னும் அளவில் வாளாபெயராய் நின்றன. ஒருமொழியே மகாவாக்கியமாம். மகாவாக்கியங்கள் முன் தந்திரத்துள் கூறப்பட்டன. `ஒருமொழி` என்னும் பால்பகா அஃறிணைப் பெயர் இங்குப்பன்மை குறித்து நின்றது. முதல் மூன்று அடிகளின் ஈற்றிலும் `உள்ளன` என்னும் பயனிலைகள் எஞ்சி நின்றன. உருவும், அருவும் கூறவே இனம் பற்றி உருவருவும் கொள்ளப்பட்டது. வருகின்ற மந்திரத்துள் `சராசரம்` என வருதலால், இங்குக் கூறப்பட்ட உருவம் முதலியன இறைவனுடைய திருமேனிகளாயின. `திருமேனிகள் ஓங்காரத்தில் உள்ளன` என்றது அவற்றது மந்திரங்களை நோக்கி இறைவனை `மந்திரத்தால் உருக் கோலி`9 எனக் கருதுதல் கிரியா மார்க்க முறை. அருவத் திருமேனியை மந்திரமாகவே உள்குதல் (தியானித்தல்) யோகமுறை `இம் முறைகளால் பிரணவம் சித்தியையும், முத்தியையும் தரும்` என்பதாம். சிறப்பு பற்றி முத்தி முன்னர்க் கூறப்பட்டது. முத்தியையும், சித்தியையும் தருவதை அவையேயாக உபசரித்துக் கூறினார்.இதனால், பிரணவத்தினது இயல்பும், அதன் வழித்தான யோகத்தின் பயனும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage