ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. காரியம் ஏழ்கண் டறும்மாயப் பாழ்விடக்
    காரணம் ஏழ்கண் டறும்போதப் பாழ் விடக்
    காரிய காரண வாதனை கண்டறும்
    சீர் உப சாந்தம் முப் பாழ்விடத் தீருமே.
  • 2. மாயப் பாழ் சீவன் வியோமப்பாழ் மன்பரன்
    சேயமுப் பாழ்எனச் சிவசக்தி யில்சீவன்
    ஆய வியாத்தம் எனும்முப்பாழ் ஆம் அந்தத்
    தூய சொரூபத்தில் சொல்முடி வாகுமே.
  • 3. எதிர்அற நாளும் எருதுவந் தேறும்
    பதியெனும் நந்தி பதமது கூடக்
    கதியெனும் பாழைக் கடந்துகற் பனையை
    உதறிஅப் பாழில் ஒடுங்குகின் றேனே.
  • 4. துரியம் அடங்கிய சொல்லுறும் பாழை
    அரிய பரம்பரம்` என்பர்கள் ஆதர்
    அரிய பரம்பரம் அன்றே உதிக்கும்
    அருநிலம் என்பதை ஆர் அறி வாரே.
  • 5. ஆறாறும் நீங்க நமவாய் அகன்றிட்டு
    வேறா கியபரை யாஎன்றும் மெய்ப்பரன்
    ஈறான வாசியிற் கூட்டும் அதுஅன்றோ
    தேறாச் சிவாய நமஎனத் தேறிலே.
  • 6. உள்ளம்உரு என்றும் உருவம் உளம்என்றும்
    உள்ளப் பரிசறிந்(து) ஓரு மவர்கட்குப்
    பள்ளமும் இல்லை திடர் இல்லை பாழ்இல்லை
    உள்ளமும் இல்லை உருவில்லை தானே.