
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 27. முப்பாழ்
பதிகங்கள்

மாயப் பாழ் சீவன் வியோமப்பாழ் மன்பரன்
சேயமுப் பாழ்எனச் சிவசக்தி யில்சீவன்
ஆய வியாத்தம் எனும்முப்பாழ் ஆம் அந்தத்
தூய சொரூபத்தில் சொல்முடி வாகுமே.
English Meaning:
Tat-Tvam-Asi End of Space ThreeThe Maya Space is of Jiva;
The Bodha (Vyoma) Space is of Para;
The Upasanta Space (Vyapta) is
Where Jiva one with Siva-Sakti is;
All three Spaces are of Pure Manifestations (Svarupa)
—The End of Tvam-Tat-Asi that is Tat-Tvam-Asi.
Tamil Meaning:
மாயப் பாழ், சீவப் பாழ், வியோமப் பாழ் ஆகிய மூன்றும், `நிலைபெற்ற பரம் பொருளைப்போல மிக மேம்பட்ட நிலை` என்று சொல்லப்பட மற்றும் அவையே, `சீவன் சிவனது திருவருளில் அடங்கி நிற்கும் முப்பாழ்` என்றும் சொல்லப்படும். மிகத் தூயதாகிய உண்மை நிலை, அப், `பாழ்` என்னும் பெயரும் அற்ற இடமாகும்.Special Remark:
முன் மந்திரத்தில் `போதப் பாழ்` எனக் கூறியதைச் ``சீவப் பாழ்`` என்றும் ``உபசாந்தம்`` எனக் கூறியதை ``வியோமப் பாழ்`` என்றும் இம்மந்திரத்திற் கூறியவாறு காண்க.இதனால், `முப்பாழ்` என்பவற்றின் பெயர் வேறுபாடுகளும், உண்மை இயல்பும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage