
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 27. முப்பாழ்
பதிகங்கள்

ஆறாறும் நீங்க நமவாய் அகன்றிட்டு
வேறா கியபரை யாஎன்றும் மெய்ப்பரன்
ஈறான வாசியிற் கூட்டும் அதுஅன்றோ
தேறாச் சிவாய நமஎனத் தேறிலே.
English Meaning:
Import of Si-Va-Ya-Na-MaThe Tattvas six times six left,
And Malas, Anava and Maya devoid,
Denoted by letters ``Na`` and ``Ma``—
Parai to Jiva (``Ya``) Her Grace granting,
Into Paran (``Va`` Sakti And ``Si`` Siva) makes it merge,
That indeed is ``Si Va Ya Na Ma`` (the Five-letter mantra).
Tamil Meaning:
`மெய்ப் பொருளை அருளாசிரியர் பக்குவம் வாய்ந்தவர்கட்கு உபதேசிக்கும் உபதேச மொழி, `சிவாய நம` என்னும் மந்திரமே என்பதைச் சைவப் பெருமக்களன்றிப் பிறர் தெளிய மாட்டாராயினும் சைவப் பெருமக்கள் அதனைத் தெளிந்து அதன் உண்மையை ஆராயுமிடத்து, முப்பத்தாறு தத்துவங்களும் தம்மின் வேறாகி நீங்கிய பொழுது அந்த ஐந்தெழுத்தில் பாசத்திற்கு வழியாகிய `நம` என்பதை நீக்கி, முன்பு நகரத்தின் பொருளாய்த் திரோதானமாய் இருந்த சத்தி வேறுபட்டு அருட்சத்தியாய் வகாரத்தின் பொருளாகி, யகாரத்தின் பொருளாகிய ஆன்மாவை, யகாரம் நீங்கிய இரண் டெழுத்தில் ஈற்றெழுத்தாகிய வகாரம், முதலெழுத்தாகிய சிகாரத்தின் பொருளாகிய உண்மைச் சிவத்தில் பின் என்றும் நீங்காதவாறு சேர்ப்ப தாகவே யன்றோ உணரப்படும்! `பிறிதாக ஒன்றும் உணரப்படாது` என்பதாம்.Special Remark:
`பக்குவிகளுக்கு ஆசிரியர் உபதேசிக்கும் உபதேச மொழி திருவைந்தெழுத்தே` என்பது,``மன்ன என்னை ஓரு வார்த்தையுட் படுத்துப் பற்றினாய்``3
என்ற ஆசிரியர்,
``நானேயோ தவம் செய்தேன்; சிவாயநம எனப்பெற்றேன்``l என்று அருளிச் செய்தமையால் விளங்கும். அவர் எடுத்த எடுப்பிலே, ``நமச் சிவாய வாஅழ்க``* என எடுத்தருளிச் செய்தமையும் நினைக்கத் தக்கது.
``நன்னெறி யாவது நமச்சி வாயவே``*
``நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே``*
என்னும் திருமொழிகளும் ஓர்ந்துணரற்பாலன. நன்னெறி சன் மார்க்கம். ஞானநெறி. வாய் - வழி: பாசத்திற்கு வழி. ஈற்றடியை முதலில் வைத்து, `நமவாகிய வாய் அகன்றிட்டு, வேறாகிய பரை, யவ்வை மெய்ப் பரன்பால் கூட்டும்; அஃதாவது வா சிய்யில் கூட்டும்` என இயைக்க. செய்யுள் பற்றி எழுத்தும், பொருளும் விரவி வரக் கூறினார். தேறாமை, `சிவாயநம` என்பதன் பெருமையைத் தெளியாமை. எனவே, தேறுதலும் அதன் பெருமையேயாற்று. தேறுதல், அதன் காரியமாகிய ஆராய்தலையும் உடன் உணர்த்திற்று.
இதனால், `முப்பாழையும் முறையே கடத்தற்கும் பின் முப்பாழையும் கடந்து அப்பாழை அடைதற்கும் நற்றுணையாவது திருவைந்தெழுத்தே` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage