
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 27. முப்பாழ்
பதிகங்கள்

உள்ளம்உரு என்றும் உருவம் உளம்என்றும்
உள்ளப் பரிசறிந்(து) ஓரு மவர்கட்குப்
பள்ளமும் இல்லை திடர் இல்லை பாழ்இல்லை
உள்ளமும் இல்லை உருவில்லை தானே.
English Meaning:
Beyond Thought and Form is TruthFor them who realized Truth
That Thought is Form and Form is Thought,
For them is no descent, no ascent, no Void.
Neither Thought, nor Form.
Tamil Meaning:
`உயிர் உடம்பே; உடம்பே உயிர்` என இவ்வாறு உயிரின் இயல்பை மயங்கி உணர்ந்து, அந்நெறியிலே தங்கள் ஆராய்ச்சியைச் செலுத்தபவர்கட்கு உயிர் இல்பொருளேயாம். உயிர் இல்பொருளாயினமையின், உடம்பின் தன்மையை அவர் உணர்ந்ததும் உணராமையேயாம். ஆகவே, அவர்கட்கு இங்குக் கூறி வந்த இருட்குழியாகிய தத்துவச் சிக்கலும் இல்லை; அக்குழியினின்றும் ஏறும் கரையாகிய முப்பாழும் இல்லை. அவற்றைக் கடந்த வேறு வெளியாகிய பரநிலையும் இல்லை.Special Remark:
`இவையெல்லாம் உயிர் உடம்பின் வேறு என்பதை உணர்ந்து, நிலையற்ற உடல் நலத்தைப் பெரிதாக நினைந்து, அதனை அடைய முயல்பவர்கட்கே உள்ளனவாம்` என்றபடி. ``இல்லை`` என்றது, இருத்தலைப் பற்றிக் கவலை உண்டாதல் இல்லை` என்றதாம். இத்தன்மையை நோக்கியன்றோ தெய்வப் புலவர்,``நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்;
நெஞ்சத் தவல மிலர்``l
என்று அருளிச் செய்தார். ஈற்றடியை அதன் அயலடிக்கு முன்னர்க் கூட்டுக. உள்ளம் - உயிர். உரு - உடம்பு.
இதனால், முடிநிலைப் பேறாகிய இவற்றைக் கூறுமிடத்து `இன்னோரன்ன மெய்ந்நூற் பொருள்கள் எல்லாம் தக்கார்க்கே உரியன` எனத் தொகுத்துக் கூறி முடிக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage