ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. பிரமனும் மாலும் பிரானேநான் என்னப்
    பிரமன்மால் தங்கள்தம் பேதைமை யாலே
    பரமன் அனலாய்ப் பரந்துமுன் நிற்க
    அரனடி தேடி அரற்றிநின் றாரே.
  • 10. ஊழி வலஞ்செய்தங் கோரும் ஒருவற்கு
    வாழி சதுமுகன் வந்து வெளிப்படும்
    வீழித் தலைநீர் விதித்தது காவெனும்
    ஊழிக் கதிரோன் ஒளியைவென் றானே. 
  • 2. அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
    படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி
    அடிகண் டிலேன்என் றச்சுதன் சொல்ல
    முடிகண்டேன் என்றயன் பொய்மொழிந் தானே.
  • 3. ஆனே ழுலகுற நின்றஎம் அண்ணலுந்
    தானே ழுலகில் தழற்பிழம் பாய்நிற்கும்
    வானே ழுலகுறும் மாமணி கண்டனை
    யானே அறிந்தேன் அவன்ஆண்மை யாலே. 
  • 4. ஊனாய் உயிராய் உணர்வங்கி யாய்முன்னஞ்
    சேணாய்வா னோங்குந் திருவுரு வேஅண்டத்
    தாணுவும் ஞாயிறுந் தண்மதி யுங்கடந்
    தாண்முழு தண்டமு மாகிநின் றானே.
  • 5. நின்றான் நிலமுழு தண்டத்துள் நீளியன்
    அன்றே அவன்வடி வஞ்சின ராய்ந்தது
    சென்றார் இருவர் திருமுடி மேற்செல
    நன்றாங் கழலடி நாடவொண் ணாதே.
  • 6. சேவடி ஏத்துஞ் செறிவுடை வானவர்
    மூவடி தாவென் றவனும் முனிவரும்
    பாவடி யாலே பதஞ்செய் பிரமனும்
    தாவடி யிட்டுத் தலைப்பெய்யு மாறே. 
  • 7. தானக் கமலத் திருந்த சதுமுகன்
    மானக் கருங் கடல் வாழித் தலைவனும்
    ஊனத்தின் உள்ளே உயிர்போல் உணர்கின்ற
    தானப் பெரும்பொரு ளண்மைய தாமே. 
  • 8. ஆலிங் கனஞ்செய் தெழுந்த பரஞ்சுடர்
    மேலிங்ஙன் வைத்ததோர் மெய்ந்நெறி முன்னங்கண்
    டோலிங் கனஞ்செய் துலகம் வலம்வருங்
    கோலிங் கமைஞ்சருள் கூடலு மாமே.
  • 9. வாள்கொடுத் தானை வழிபட்ட தேவர்கள்
    ஆள்கொடுத் தெம்போல் அரனை அறிகிலர்
    கோள்கொடுத் தின்பங் கொடுத்துக்கோ ளாகத்தன்
    தாள்கொடுத் தானடி சாரகி லாரே.