
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 8. அடிமுடி தேடல்
பதிகங்கள்

அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண் டிலேன்என் றச்சுதன் சொல்ல
முடிகண்டேன் என்றயன் பொய்மொழிந் தானே.
English Meaning:
***************Tamil Meaning:
மாலும் பிரமனும் முறையே சிவசோதியின் அடியையும், முடியையும் காண முயன்று அவற்றின் உருவத்தைக் காணமாட்டாதவராய் மீண்டும் முன்பு இருந்த இடத்தில் வந்து கூடிய பின்பு, திருமால், `நான் அடியைக் காணவில்லை` என்று உண்மையைச் சொல்ல, பிரமன், `நான் முடியைக் கண்டேன்` என்று பொய் சொன்னான்.Special Remark:
`அதனால் அவன் இவ்வுலகில் தனக்குக் கோயில் இலனாயினான்` என்பது குறிப்பெச்சம். `அடி, முடி` என்றவற்றை ``அயன் மால்`` என்பவற்றொடு எதிர்நிரனிறையாக இயைத்தல் வேண்டும் என்பது பின்னிரண்டடிகளில் விளங்கும். இத்திருமந்திரம் பாயிரத்ததாகாது, ஈண்டையதே என்பதுமேலே குறிக்கப்பட்டது.இதனால், மால், அயன் என்னும் இருவரது தகுதி வேறு பாடுகள் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage