
ஓம் நமசிவாய
The Next Song will be automatically played at the end of each song.
Tandhiram
Padhigam
- இரண்டாம் தந்திரம் - 1. அகத்தியம்
- இரண்டாம் தந்திரம் - 2. பதிவலியில் வீரட்டம் எட்டு
- இரண்டாம் தந்திரம் - 3. இலிங்க புராணம்
- இரண்டாம் தந்திரம் - 4. தக்கன் வேள்வி
- இரண்டாம் தந்திரம் - 5. பிரளயம்
- இரண்டாம் தந்திரம் - 6. சக்கரப் பேறு
- இரண்டாம் தந்திரம் - 7. எலும்பும் கபாலமும்
- இரண்டாம் தந்திரம் - 8. அடிமுடி தேடல்
- இரண்டாம் தந்திரம் - 9. சருவ சிருட்டி
- இரண்டாம் தந்திரம் - 10. திதி
- இரண்டாம் தந்திரம் - 11. சங்காரம்
- இரண்டாம் தந்திரம் - 12. திரோபவம்
- இரண்டாம் தந்திரம் - 13. அநுக்கிரகம்
- இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை
- இரண்டாம் தந்திரம் - 15. மூவகைச் சீவ வர்க்கம்
- இரண்டாம் தந்திரம் - 16. பாத்திரம்
- இரண்டாம் தந்திரம் - 17. அபாத்திரம்
- இரண்டாம் தந்திரம் - 18. தீர்த்த உண்மை
- இரண்டாம் தந்திரம் - 19. திருக்கோயிற் குற்றம்
- இரண்டாம் தந்திரம் - 20. அதோமுக தரிசனம்
- இரண்டாம் தந்திரம் - 21. சிவநிந்தை கூடாமை
- இரண்டாம் தந்திரம் - 22. குரு நிந்தை கூடாமை
- இரண்டாம் தந்திரம் - 23. மாகேசுர நிந்தை கூடாமை
- இரண்டாம் தந்திரம் - 24. பொறையுடைமை
- இரண்டாம் தந்திரம் - 25. பெரியாரைத் துணைக்கோடல்
Paadal
-
1. ஓடவல் லார்தம ரோடு நடாவுவன்
பாடவல் லாரொலி பார்மிசை வாழ்குவன்
தேடவல் லாரொலி பார்மிசை வாழ்குவன்
கூடவல் லாரடி கூடுவன் யானே.
-
2. தாமிடர்ப் பட்டுத் தளிர்போல் தயங்கினும்
மாமனத் தங்கன்பு வைத்த திலையாகும்
நீயிடர்ப்பட்டிருந் தென்செய்வாய் நெஞ்சமே
போமிடத் தென்னொடும் போதுகண் டாயே.
-
3. அறிவார் அமரர் தலைவனை நாடிச்
செறிவார் பெறுவர் சிவதத் துவத்தை
நெறிதான் மிகமிக நின்றருள் செய்யும்
பெரியா ருடன் கூடல் பேரின்ப மாமே.
-
4. தாழ்சடை யான்றன் தமராய் உலகினிற்
போர்புக ழால்எந்தை பொன்னடி சேருவார்
வாயடையா உள்ளந் தேர்வார்க் கருள்செய்யுங்
கோவடைந் தந்நெறி கூடலு மாமே.
-
5. உடையான் அடியார் அடியா ருடன்போய்ப்
படையா ரழலான் பதிசென்று புக்கே
கடையார நின்றவர் கண்டறி விப்ப
உடையான் வருகென ஓலமென் றாரே.
-
6. அருமைவல் லான்கலை ஞானத்துள் தோன்றும்
பெருமைவல் லோன்பிற விச்சுழி நீந்தும்
உரிமைவல் லோன் உணர்ந் துழி யிருக்கும்
திருமைவல் லாரொடு சேர்ந்தனன் யானே.