
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 25. பெரியாரைத் துணைக்கோடல்
பதிகங்கள்

உடையான் அடியார் அடியா ருடன்போய்ப்
படையா ரழலான் பதிசென்று புக்கே
கடையார நின்றவர் கண்டறி விப்ப
உடையான் வருகென ஓலமென் றாரே.
English Meaning:
I walked with them—Devotees of Lord`s devotees
And reached the City of The Fire-hued Lord
Sporting weapons divine
They who stood at gate saw me,
And announced me to the Lord;
And the Lord said, ``Come in``
And they all cried ``Hail! You are the Refuge.
Tamil Meaning:
சிவபெருமான் அடியவர் யாவரும் தம்மைப் போலும் அடியாருடன் கூடியே சிவபுரத்தை அடைந்து அதன் வாயிலில் நின்றனர். அப்பொழுது அவ்வாயிலில் உள்ள கணங்கள் சிவபெருமானிடம் சென்று, `அடியவர் குழாமாக வந்துள்ளனர்` என்று விண்ணப்பிக்க, அப்பெருமான், `அவர்கள் உள்ளே வருவாராக` எனத் திருவாய் மலர்ந்தருள, அவ்வருளிப்பாட்டினை அக் கணங்களால் உணர்ந்து, `முறையோ` என்று ஓலமிட்டுச் சென்று தம் குறை தீர்ந்தனர்.Special Remark:
என்றது, ``சிவனடியார்கள் பலரும் பெரியாரைத் துணைக்கொண்டே அவனை அடைந்தார்கள்`` என்றபடி இதற்குச் சேரமான்பெருமாள் நாயனார் வரலாறு சிறந்த எடுத்துக்காட்டாகும். படை - சூலம். ``படையும், ஆரழலும் உடையவன்`` என்க. ``புக்கு, அறிவிப்ப`` என்னும் எச்சங்கள் இரண்டும், ``என்றார்`` என்பதனோடு முடிந்தன. அடியாருடன் புக்கே` என்ற ஏகாரம், தனித்துப் புகாமையை விளக்கி நின்றது.இதனால், சிவனை அடைதற்கு அவனை அடைந்த பெரியாரைத் துணைக்கோடல் இன்றியமையாததாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage