
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 25. பெரியாரைத் துணைக்கோடல்
பதிகங்கள்

அருமைவல் லான்கலை ஞானத்துள் தோன்றும்
பெருமைவல் லோன்பிற விச்சுழி நீந்தும்
உரிமைவல் லோன் உணர்ந் துழி யிருக்கும்
திருமைவல் லாரொடு சேர்ந்தனன் யானே.
English Meaning:
The Devout Supreme will in, be;The Devout Eminent will master eddies of birth,
Devout Dear realizing self will immortal remain;
I joined to consort.
Tamil Meaning:
எல்லாம் வல்லவனாகிய சிவபெருமானை உணர்த் தும் நூலறிவினால் வருகின்ற பெருமையை உடைய கலைஞன், காலக் கழிவின்கண் பிறவிக் கடலைக் கடந்து சிவபெருமான் திருவடியை அடைவான். அந்நூலறிவைத் தன தாக்கிக் கொள்ளும் அனுபூதிமான், அப்பொழுதே சிவனைப் பெற்று, உலகம் உள்ளளவும் வாழ்வான். ஆகையால் சிவமே பெறும் திரு நெறியொழுக்கம் வல்ல சிவானுபூதிச் செல்வரோடேயான் சேர்ந்திருக்கின்றேன் (தி.8 திருச்சதகம்).Special Remark:
அருமை வல்லான் - பிறரால் ஆகாதவற்றையும் செய்ய வல்லவன்; சிவபெருமான். வல்லான் கலை என்னும் ஆறாவதன் தொகை ``வனைகலத்தது திகிரி`` என்பதுபோல, செயப்படுபொருள் ஆகிய காரகத்தின்கண் வந்தது. `ஞானத்துள்` என்றது வேற்றுமை மயக்கம். ``தோன்றும்`` என்றது எச்சம். ``நீந்தும், இருக்கும்`` என்ற செய்யுமென் முற்றுக்கள் எதிர்காலம் உணர்த்தி நின்றன. `ஆகையால்` என்பது சொல்லெச்சம். ``திருமை`` என்பதில் ``மை`` உடையராந் தன்மை குறித்து நின்றது. ``யானே`` என்ற பிரிநிலை ஏகாரம் ``வல்லாரொடு`` என்பதனோடு பிரித்துக் கூட்டப்பட்டது. அதனால், ``அவரொடு சேர்தல் பெரும்பயன் உடைத்தாதல்`` விளங்கிற்று.இதனால், ``பெரியாருள்ளும் மிகப் பெரியாரைத் துணைக் கொள்ளுதல் பெரும்பயன் தரும்`` என்பது கூறப்பட்டது.
இங்கு உரைத்தவாற்றானே இறுதியிரண்டு அதிகாரங்களும் பொது அறம் ஆகாது ஈண்டே கூறுதற்குரிய சிறப்பறம் ஆதல் அறிந்துகொள்க.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage