
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 25. பெரியாரைத் துணைக்கோடல்
பதிகங்கள்

தாழ்சடை யான்றன் தமராய் உலகினிற்
போர்புக ழால்எந்தை பொன்னடி சேருவார்
வாயடையா உள்ளந் தேர்வார்க் கருள்செய்யுங்
கோவடைந் தந்நெறி கூடலு மாமே.
English Meaning:
The Holy are kin of LordThey reach the Golden Feet of Father;
He, of flowing matted locks;
Whose fame envelopes worlds all,
He blesses those,
Who seek Him in the silence of their hearts;
Reach the King Almighty,
You shall attain the Regal Goal.
Tamil Meaning:
நீண்ட சடையை உடைய சிவபெருமானுக்கு அடி யவராயினமையினால் உலகம் முழுதும் போர்த்த புகழை உடையவ ராய், அப்பெருமானது அழகிய திருவடியையன்றிப் பிறிதொன்றையும் அடைய விரும்பாதவராகிய அவரிடத்துச் சென்று சேர்ந்து உள்ளம் தெளிவடைபவரிடத்துச் சிவபெருமான் அருளுடையவனாவன். அதனால், அவன் அருள் புரியும் நெறி வாய்க்கப் பெற்று. அவனோடு ஒன்றுதலாகிய பேற்றினையும் பெறுதல் கூடும்.Special Remark:
``தார் சடையான்`` என்பது பாடம் அன்று. ``போர் புகழ்``, வினைத்தொகை. ``வாய்`` என்றது ஏழனுருபு. ``கோ அருள் செய்யும்`` என மாற்றுக. ``அந்நெறி அடைந்து (அவனைக்) கூடலும் ஆம்`` என்க. இத்திருமந்திரத்துள் இன எதுகை வந்தது.இதனால், பெரியாரைத் துணைக்கோடல், பிரானருளைப் பயத்தல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage