
ஓம் நமசிவாய
The Next Song will be automatically played at the end of each song.
Tandhiram
Padhigam
- இரண்டாம் தந்திரம் - 1. அகத்தியம்
- இரண்டாம் தந்திரம் - 2. பதிவலியில் வீரட்டம் எட்டு
- இரண்டாம் தந்திரம் - 3. இலிங்க புராணம்
- இரண்டாம் தந்திரம் - 4. தக்கன் வேள்வி
- இரண்டாம் தந்திரம் - 5. பிரளயம்
- இரண்டாம் தந்திரம் - 6. சக்கரப் பேறு
- இரண்டாம் தந்திரம் - 7. எலும்பும் கபாலமும்
- இரண்டாம் தந்திரம் - 8. அடிமுடி தேடல்
- இரண்டாம் தந்திரம் - 9. சருவ சிருட்டி
- இரண்டாம் தந்திரம் - 10. திதி
- இரண்டாம் தந்திரம் - 11. சங்காரம்
- இரண்டாம் தந்திரம் - 12. திரோபவம்
- இரண்டாம் தந்திரம் - 13. அநுக்கிரகம்
- இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை
- இரண்டாம் தந்திரம் - 15. மூவகைச் சீவ வர்க்கம்
- இரண்டாம் தந்திரம் - 16. பாத்திரம்
- இரண்டாம் தந்திரம் - 17. அபாத்திரம்
- இரண்டாம் தந்திரம் - 18. தீர்த்த உண்மை
- இரண்டாம் தந்திரம் - 19. திருக்கோயிற் குற்றம்
- இரண்டாம் தந்திரம் - 20. அதோமுக தரிசனம்
- இரண்டாம் தந்திரம் - 21. சிவநிந்தை கூடாமை
- இரண்டாம் தந்திரம் - 22. குரு நிந்தை கூடாமை
- இரண்டாம் தந்திரம் - 23. மாகேசுர நிந்தை கூடாமை
- இரண்டாம் தந்திரம் - 24. பொறையுடைமை
- இரண்டாம் தந்திரம் - 25. பெரியாரைத் துணைக்கோடல்
Paadal
-
1. எம்பெரு மான்இறை வாமுறை யோஎன்று
வம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்ல
அம்பவழ் மேனி அறுமுகன் போய்அவர்
தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே.
-
2. அண்டமொ டெண்டிசை தாங்கும் அதோமுகம்
கண்டங் கறுத்த கருத்தறி வாரில்லை
உண்டது நஞ்சென் றுரைப்பர் உணர்விலோர்
வெண்டலை மாலை விரிசடை யோற்கே.
-
3. செய்தான் அறியுஞ் செழுங்கடல் வட்டத்துப்
பொய்யே யுரைத்துப் புகழும் மனிதர்கள்
மெய்யே யுரைக்கில்அவ் விண்ணோர்தொழச் செய்வன்
மைதாழ்ந் திலங்கு மணிமிடற் றோனே.
-
4. நந்தி எழுந்து நடுவுற ஓங்கிய
செந்திக் கலந்துட் சிவனென நிற்கும்
உந்திக் கலந்தங் குலகம் வலம்வரும்
அந்தி இறைவன் அதோமுக மாமே.
-
5. அதோமுகங் கீழண்ட மான புராணன்
அதோமுகந் தன்னொடும் எங்கும் முயலும்
சதோமுகத் தொண்மலர்க் கண்ணிப் பிரானும்
சதோமுகன் ஊழித் தலைவனு மாமே.
-
6. அதோமுக மாமல ராயது கேளும்
அதோமுகத் தாலொரு நூறாய் விரிந்து
அதோமுக மாகிய அந்தமில் சத்தி
அதோமுக மாகி அமர்ந்திருந் தானே.