
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 20. அதோமுக தரிசனம்
பதிகங்கள்

அதோமுகங் கீழண்ட மான புராணன்
அதோமுகந் தன்னொடும் எங்கும் முயலும்
சதோமுகத் தொண்மலர்க் கண்ணிப் பிரானும்
சதோமுகன் ஊழித் தலைவனு மாமே.
English Meaning:
The Ancient One of AdhomukhaCreated Universe vast here below;
In Adhomukha He animates all life;
He is Lord of Adhomukha Sakti of lotus eye;
He is Lord of Aeons` End.
Tamil Meaning:
அதோ முகத்தால் அதோ மாயையாகிய அசுத்த மாயையின் காரியங்களாகிய அண்டங்களில் நிறைந்து நிற்கும் பழையோனாகிய சிவபெருமான், அவ்வதோ முகத்தோடே எங்கும் பொருந்தி நின்று செயலாற்றுவான். அதனால், தாமரை மலர் மாலையை அணிந்த பிரமதேவனும், பிரம கற்பத்திற்குத் தலைவனும் அவனேயாவன்.Special Remark:
நூற்றிதழ்த் தாமரை, `சதோமுகம்` எனப் பட்டது. `நிவிர்த்தி கலைக்குத் தலைவன் எனப் படுகின்ற பிரமனாகி நிற்பதும் அதோமுகமே` என்றவாறு.இதனால், அதோமுகமே கீழுலகத்தார்க்கு அருளுவது என்பது வேறோராற்றால் வலியுறுத்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage