
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 20. அதோமுக தரிசனம்
பதிகங்கள்

செய்தான் அறியுஞ் செழுங்கடல் வட்டத்துப்
பொய்யே யுரைத்துப் புகழும் மனிதர்கள்
மெய்யே யுரைக்கில்அவ் விண்ணோர்தொழச் செய்வன்
மைதாழ்ந் திலங்கு மணிமிடற் றோனே.
English Meaning:
Ye men!Who in this sea-girt globe live
In falsehood and flattery!
Why His throat gleams dark,
He knows who made it so;
When you speak the truth
He will make,
Celestial beings bow to you.
Tamil Meaning:
படைப்பவனாகிய பிரமதேவனது அண்டம் எனப்படும் நிலவட்டத்தின் கண் நின்றுகொண்டு அறியாமை காரணமாக வேறு வேறு தேவரை, `முதற்கடவுள்` என்று சொல்லிக் கொண்டாடுகின்ற மனிதர்கள், அறியாமை நீங்கிப் பரமசிவன் தமக்குக் கறைமிடற்றண்ணலாய் (சீகண்டனாய்) நின்று அருள் புரிதலை உணர்ந்து புகழவல்லாராயின், அவ்வண்ணல் அவர்களை முன்பு அவரால் புகழப்பட்ட தேவர்களே வந்து வணங்குமாறு உயர் நிலையில் வைத்தருளுவன்.Special Remark:
எனவே, நிலவுலகத்தார்க்குச் சீகண்ட உருத்திரன், மற்றும் குணிருத்திரன், மால், அயன், இந்திரன் முதலாகப் பலரிடத்தும் நின்று அருள்புரிவது பரமசிவனது அதோமுகமே என்பதாம்.``யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே
மாதொரு பாக னார்தாம் வருவர்``
என்ற சிவஞானசித்தி (சூ. 2.25) க்கும் இதுவே கருத்தாகக் கொள்க.
இங்கு ``மெய்`` எனப்பட்டது, ``பொருள்சேர் புகழ்`` (குறள், 5) எனத் திருவள்ளுவர் கூறிய புகழையாம்.
மேல், `அதோமுகந்தானே கண்டங் கறுத்து நின்றது` எனக் கூறினமையால், இங்கு ``மைதாழ்ந்திலங்கு மணிமிடற்றோன்`` என்பது அம் முகத்தையே குறித்தல் இனிது விளங்கும்.
``தொழப்படுந் தேவர்தம் மால்தொழுவிக்குந்தன் தொண் டரையே`` (தி.4 ப.112 பா.5) என்ற அப்பர் திருமொழியை இங்கு, ``விண்ணோர் தொழச்செய்வன்`` என்றதனோடு வைத்துக் காண்க.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage