ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Paadal

  • 1. ஆடம் பரங்கொண் டடிசிலுண் பான்பயன்
    வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்
    ஆடியும் பாடி அழுதும் அரற்றியும்
    தேடியும் காணீர் சிவனவன் தாள்களே.
  • 2. ஞானமில் லார்வேடம் பூண்டிந்த நாட்டிடை
    ஈனம தேசெய் திரந்துண் டிருப்பினும்
    ஆன நலங்கெடும் அப்புவி ஆதலால்
    ஈனவர் வேடம் கழிப்பித்தல் இன்பமே.
  • 3. இன்பமும் துன்பமும் நாட்டா ரிடத்துள
    நன்செயல் புன்செய லால்அந்த நாட்டிற்காம்
    என்ப இறைநாடி நாடோறும் நாட்டினில்
    மன்பதை செப்பம் செயின்வையம் வாழுமே.
  • 4. இழிகுலத் தார்வேடம் பூண்பர்மேல் எய்த
    அழிகுலத் தார்வேடம் பூண்பர்தே வாகப்
    பழிகுலத் தாகிய பாழ்சண்ட ரானார்
    கழிகுலத் தோர்கள் களையப்பட் டோரே.
  • 5. பொய்த்தவம் செய்வார் புகுவர் நரகத்துப்
    பொய்த்தவம் செய்தவர் புண்ணிய ராகாரேல்
    பொய்த்தவம் மெய்த்தவம் போகஉண் போக்கியம்
    சத்திய ஞானத்தால் தங்கும் தவங்களே.
  • 6. பொய்வேடம் பூண்பர் பொசித்தல் பயனாக
    மெய்வேடம் பூண்போர் மிகுபிச்சை கைக்கொள்வர்
    பொய்வேடம் மெய்வேடம் போலவே பூணினும்
    உய்வேட மாகும் உணர்ந்தறிந் தார்க்கே.