
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 8. அவ வேடம்
பதிகங்கள்

இழிகுலத் தார்வேடம் பூண்பர்மேல் எய்த
அழிகுலத் தார்வேடம் பூண்பர்தே வாகப்
பழிகுலத் தாகிய பாழ்சண்ட ரானார்
கழிகுலத் தோர்கள் களையப்பட் டோரே.
English Meaning:
Why they don the Holy RobesThe lowly-born don the robe
That they may the high become;
The high-born don the robe
That they may the Gods become;
To infamy-born are the knaves in robes
That they be disrobed and cast away.
Tamil Meaning:
தாழ்ந்த குலத்திற் பிறந்தவர்கள் சிலர், ஒழுக்கத்தால் உயர்வெய்த நினையாமல், எளிதில் மேன்மையைப் பெறுதற் பொருட்டுத் தவவேடத்தைப் புனைந்து கொள்வர். உயர்ந்த குலத்திற் பிறந்தவர்கள் சிலரும் அக்குலத்திற்கு ஏற்ற ஒழுக்கமுடை யராய் நிற்கமாட்டாமையின் அக்குலத்தன்மை அழியப்பெற்று அந்நிலை நீங்கிக் கடவுளராக வைத்துப் போற்றப்படும் மிக உயரந்த நிலையைப் பெறுதற் பொருட்டுத் தவ வேடத்தைப் புனைந்து கொள்வர். இவ் இரு சாராரும், தொன்று தொட்டே பழிபாவங்களையுச் செயது பாழ்பட்டுவரும் கொடியராயினார் நாட்டுவாழ் குலத்தோரி னின்றும் நீக்கப்பட்ட குலத்தராயினாற் போலவே அரசு முறைமையுள் நாட்டு வாழ்க்கையினின்றும் நீக்கப்பட்டனர்.Special Remark:
`வழிகுலத்தோர்` எனின் மோனை சிதைதலானும், பொருள் படாமையானும் அது பாடமாகாமை அறிக. ``தேவாக`` என்ற தனால், இது `பூசுரர்` எனப்படுவாரை உட்கொண்டு கூறிய தாயிற்று. பழிகுலம் - பழிக்கப்பட்டு வரும் குலம். இப்பழி, அருள் வடிவின வாகிய ஆக்களை அஞ்சாது கொல்லும் தொழிலுடைமை பற்றிப் பழிக்கப்படும் பழியாம். இக்குலத்தவரை, `சண்டாளர்` என்றலும் இது பற்றி `இவர் நாட்டில் ஏனையோரோடு கூடிவாழ்தற்கு உரியரல்லர்` என்பது பண்டை அரசுமுறை. அதனால், `அம்முறையே போலி வேடத்தார்க்கும் உரித்தாகற்பாலது` எனக் கூறுமுத்தால், போலி வேடம் பூண்பாரது கொடுமையை விளக்கினார்.``நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்`` 3
என்றார் திருவள்ளுவ நாயனாரும், `கழிகுலத்தோர்கள் போல` என உவமஉருபு விரிக்க போலி வேடத்தால் உளவாகும்
தீமைகள் பல. அவற்றுள் உண்மை வேடத்தாரையும் உலகம் ஐயுறச் செய்தலும் அது காரணமாக உண்மை வேடம் தோன்றாது போதலும் தலையாய தீமைகள், `அதனால் அது குறிக்கொண்டு களையற்பாலது` என நாயனார் பல்லாற்றானும் வலியுறுத்துகின்றார்.
``இவ்வேடர் - கொத்துக் கெலாமோர்
கொடும்பழியைச் செய்தீரே``*
என்னும் கந்தபுராணச் செய்யுளில், ``இவ்வேடர் கொத்து`` என்றதற்கு, `இத் தவவேடம் உடையராது கூட்டம்` என்பதே உட்பொருளாக உரைப்பர். அதனானும் போலி வேடத்தது கொடுமையை உணர்ந்து கொள்க.
மூன்றாம் அடியை, `பாசண்டாரனார்` எனப்பாடம் ஓதி, `சமயத் தலைவர்போல வேடம் பூண்டும் அத்தலைமைக் குணம் இல ராய்ப் பழிக்கப்படும் கூட்டத்தினர் மக்களால் விலக்கப்பட்ட கூட்டத் தினராய், அரசனாலும் களையப்பட்டார்` என்று உரைத்தலும் ஆம்.
இதனால், `அரசன் தன் குடிகளில் உள்ளாரை இங்ஙனம் கழித்தல் கூடுமோ` என்னும் ஐயத்தையகற்றி, அது முறையாமாறு கூறப் பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage