
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 8. அவ வேடம்
பதிகங்கள்

பொய்த்தவம் செய்வார் புகுவர் நரகத்துப்
பொய்த்தவம் செய்தவர் புண்ணிய ராகாரேல்
பொய்த்தவம் மெய்த்தவம் போகஉண் போக்கியம்
சத்திய ஞானத்தால் தங்கும் தவங்களே.
English Meaning:
Tapas—True and FalseThey who perform false tapas enter hell
They shall not become the holy ones;
False tapas is deceit and vain effort
A ruse for worldly enjoyment;
Only by Truth of Jnana can tapas firm abide.
Tamil Meaning:
அகத்தே தவ உணர்வின்றிப் புறத்தே பொய்யாகத் தவவேடத்தை மட்டும் கொண்டு நடித்தவர் புண்ணியராகாது பாவிகளேயாவர் என்பது உண்மையாயின், அச்செயலுடையார் மறுமையில் நரகம் புகுதலும் உண்மை. இனி அவலரது நடிப்பிற்குப் பயன் மெய்த்தவம் இல்லா தொழிய பொய்த் தவத்தால் இம்மையிற் சிறிது இன்பத்தை நுகர்தலும், மறுமையில் பெரிய நரகத் துன்பத்தை அடைதலுமேயாம். ஆகையால் உண்மையான அகத்துணர்வாலே தவம் உளதாகும்; பொய் வேடத்தால் உளதாகாது.Special Remark:
இரண்டாம் அடியை முதற்கண் வைத்து உரைக்க. மூன்றாம் அடியை, `போகத்துட் போக்கியம்` என ஓதுதல் பாடமன்று. ஈற்றில் நின்ற பிரிநிலை ஏகாரத்தை, ``ஞானத்தால்`` என்பதனோடு கூட்டுக. ``ஞானம்`` என்று இங்குத் தவ உணர்வை,இதனால், போலி வேடம் மறுமையில் நரகம் பயத்தல் கூறப்பட்டது.
``தவம்மறைந் தல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று`` l
என்றதனால், `போலி வேடம் புனைதல் உயிர்க்கொலை செய்த லோடொத்த தீவினைச் செயல்` எனத் திருவள்ளுவரும் குறிப்பால் உணர்த்தினார். அதனால், `அவர் நரகம் புகுதல் அவர்க்கும் உடன் பாடு` என்பது பெற்றாம்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage