
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 8. அவ வேடம்
பதிகங்கள்

ஞானமில் லார்வேடம் பூண்டிந்த நாட்டிடை
ஈனம தேசெய் திரந்துண் டிருப்பினும்
ஆன நலங்கெடும் அப்புவி ஆதலால்
ஈனவர் வேடம் கழிப்பித்தல் இன்பமே.
English Meaning:
Men of false robes bring famineWhen those that have not acquired Jnana
Don the holy robes
And go about the land begging,
And evil ways pursuing,
The rains fail and famine strikes the land;
Better by far, these evil men are de-robed straight.
Tamil Meaning:
இதன் பொருள் வெளிப்படை.Special Remark:
``ஞானமில்லார் பூண்டு`` என்றதனால், வேடம் ஞான முடையர்க்குரிய வேடமாயிற்று. ``இந்த நாட்டிடை ஈனம் செய்து`` என்றது, `இழிசெயலுக்கு நாணுதலுடைய ஞானியர் மிக்கு வாழும் இந்தநாட்டின்கண் நாணுதல் சிறிதும் இன்றி இழிசெயல்கின்றவர்` எனப் பொருள் தந்தது. ``இந்தநாடு`` என்றது நமது பரத கண்டத்தை. `எப்புவியிருப்பினும் அப்புவி ஆன நலங்கெடும்` என ஒருசொல் வருவித்தே உரைக்க. புவி - நாடு. இஃது, ``இந்த நாட்டை`` எனச் சுட்டியதன் உட்பகுதியைக் குறித்தது. ஆன நலம் - உண்டான. நன்மை `ஈனர்` என்பதில், ஓர் அகரம் விரித்தல் பெற்றது. ``எப்புவி யிருப்பினும் அப்புவி ஆன நலங்கெடும்`` என்றதனால், `ஈனரது வேடத்தை அகற்றுவிக்கற்பாலார் அந்நாட்டில் வாழ்பவர்` என்பது போந்தது. இன்பம் தருவதனை, ``இன்பம்`` என்றார்.``எவரேனும் தாமாக இலாடத் திட்ட`` என்னும் திருத் தாண்டகம் இதனோடு முரணாமை மேல் ``வேட நெறியில்லார்`` என்னும் மந்திரத்து உரையில் விளக்கப்பட்டது. இதன் மூன்றாம் அடியில், `மான நலங்கெடும்; வையகம் பஞ்சமாம்` என்பதும் பாடம்,
இதனால், போலி வேடத்தாரை அறிந்து அகற்றுதல் அறிவுடையார்க்குக் கடனாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage