
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 8. அவ வேடம்
பதிகங்கள்

பொய்வேடம் பூண்பர் பொசித்தல் பயனாக
மெய்வேடம் பூண்போர் மிகுபிச்சை கைக்கொள்வர்
பொய்வேடம் மெய்வேடம் போலவே பூணினும்
உய்வேட மாகும் உணர்ந்தறிந் தார்க்கே.
English Meaning:
Discerning eyes see through false robeThey don the false robe their bellies to fill;
They don the true robe and receive exalted oblations above;
Even if false robes are donned to simulate the true,
The discerning see through, and make themselves free.
Tamil Meaning:
சிலர் தொழில் செய்யாது மடிந்திருந்து வயிறு வளர்க்கக் கருதியே பொய்யாகத் தவ வேடத்தைப் புனைந்து கொள்வர். (`அவர் இல்வாழ்வாரை மருட்டியும், வெருட்டியும், ழிந்த பிச்சையை, நீக்காது ஏற்று உண்டு வாழ்வர்.) மெய்யாகவே தவ வேடத்தைப் பூண்பவர் இல்வாழ்வார் அன்போடு அழைத்து இடும் உயரிய பிச்சையையே ஏற்பர். (இவையும் அவ்இருசாராரையும் அறிதற்குக் குறியாம்.) தோற்றத்தில் பொய்வேடமும் மெய்வேடம் போலவே பூணப்பட்டாலும், உணர்வோடு கூடாத பொய் வேடம் அவர்க்கு உய்தற்கு ஏதுவாய வேடமாகாது கெடுதற்கு ஏதுவாய வேடமாக,) தவத்தினது பெருமையை உணர்ந்து அதனைப் பூண்டு நிற்போர்க்கே அஃது அவர் உய்தற்கு ஏதுவான வேடமாகும்.Special Remark:
மிகு பிச்சை - உயர்வுடையதாய பிச்சை உயர்வு அன்பொடு கூடிநிற்றல். `மெய்வேடம் பூண்பார் கொள்ளும் பிசை உயர் பிச்ை\\\\u2970?` எனவே, `பொய் வேடம் பூண்பார் கொள்ளும் பிச்சை இழி பிச்ை\\\\u2970?` என்பது போந்தது. `மெய் வேடம் பூண்டார் இல்வாழ்வார் வருந்தாது மகிழ்ந்து இடக் கொள்ளும் பிச்சை. வண்டு, மலர் வருந்தாது அதனிடத்துள்ள தேனை உண்டல் போல்வது` என்றற்கு அதனை, `மாதூகரி பிச்ை\\\\u2970?` என்பர் வடநூலார். ``பூணினும்`` என்பது `பூணப்பட்டாலும்` எனச்செயப்பாட்டு வினைப்பொருள் தந்தது. இனி, `பொய்வேடத்தை` என இரண்டாவது விரிப்பினுமாம். `அறிந்தோர்க்கே உய்வேடமாம்` என்றதனால், `அறியாத பொய் வேடத்தார்க்கு அஃது உய்வேடமாகாது, கெடுவேடமாம்` என்பது விளங்கிற்று. ``உய்வேடம்`` என்பதற்கு, `அப்பொய்வேடம் ஒழிதற் குரிய வேடமாம்` என்றுரைப்பினுமாம். ``உணர்ந்தறிந்தோர்`` என்ற ஒருபொருட் பன்மொழிகள் அவற்றதுகாரியமாகிய மெய் வேடத்தினையும், அதற்கேற்ற ஒழுக்கத்தையும் குறித்தன.இதனால், `போலிவேடமும் உண்மை வேடத்தோடு ஒத்துத் தோன்றினும், செயலாலும், பயனாலும் அவை தம்மில் பெரிதும் வேறுபட்டனவாம்` என்பது கூறுமுகத்தால், போலிவேடம் தவ வேடமாகாது அவவேடமாதல் உணர்த்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage