ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Paadal

  • 1. ஞான மிலார் வேடம் பூண்டும் நரகத்தார்
    ஞானமுள் ளோர்வேடம் இன்றெனில் நன்முத்தர்
    ஞான முளதாக வேண்டுவார் நக்கன்போல்
    ஞான முளவேடம் நண்ணிநிற் பாரே.
  • 2. புன்ஞானத் தோர்வேடம் பூண்டும் பயனில்லை
    நன்ஞானத் தோர்வேடம் பூணார் அருள்நண்ணி
    துன்ஞானத் தோர்சம யத்துரி சுள்ளோர்
    பின்ஞானத் தோர் ஒன்றும் பேசகி லாரே.
  • 3. சிவஞானி கட்கும் சிவயோகி கட்கும்
    அவமான சாதனம் ஆகாது தேரில்
    நவமாம் அவர்க்கது சாதனம் நன்கும்
    உவமான மில்பொருள் உள்ளுற லாமே.
  • 4. கத்தித் திரிவர் கழுவடி நாய்கள்போல்
    கொத்தித் திரிவர் குரற்களி ஞானிகள்
    ஒத்துப் பொறியும் உடலும் இருக்கவும்
    செத்துத் திரிவர் சிவஞானி யோர்களே.
  • 5. அடியா ரவரே அடியா ரலாதார்?
    அடியாரு மாகாதவ் வேடமு மாகா
    அடியார் சிவஞான மானது பெற்றோர்
    அடியா ராலாதார் அடியார்கள் அன்றே.
  • 6. ஞானிக்குச் சுந்தர வேடமும் நல்லவாம்
    தானுற்ற வேடமும் தற்சிவ யோகமே
    ஆனஅவ் வேடம் அருள்ஞான சாதனம்
    ஆனது மாமொன்றும் ஆகா தவனுக்கே.
  • 7. ஞானத்தி னாற்பதம் நண்ணும் சிவஞானி
    தானத்தில் வைத்த தனிஆ லயத்தனாம்
    மோனத்தின் ஆதலின் முத்தனாம் சித்தனாம்
    ஏனைத் தவசி இவனென லாகுமே
  • 8. தானற்ற தன்மையும் தான் அவ னாதலும்
    ஏனைய அச்சிவ மான இயற்கையும்
    தானுறு சாதக முத்திரை சாத்தலும்
    மோனமும் நந்தி பதமுத்தி பெற்றவே.