
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 22. முத்துரியம்
பதிகங்கள்

தொம்பதம் தற்பதம் சொல்முத் துரியம்போல்
நம்பிய மூன்றாம் துரியத்து நற்பரம்
அம்புவி உன்னா அதிசூக்கம் அப்பாலைச்
செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.
English Meaning:
On to the Third TuriyaAs you reached Tvam-Pada and Tat-Pada,
So now enter the third Turiya State (Siva Turiya)
At its end is the Divine Light (Asi-Pada)
The Super-Subtlety (Suksma) that words can conceive not;
Beyond is Siva
Who as Nandi accepted me into His Grace.
Tamil Meaning:
`துவம்` பதம், `தத்` பதம் முதலிய சொற்களின் வழியாக நிகழும் `சீவ துரியம், சிவ துரியம், பர துரியம்` என்னும் முத்துரிய அனுபவ நிகழ்ச்சிகளில், பெரிதும் விரும்பப்பட்ட மூன்றாவதாகிய பரதுரியத்தில் முதற்கண் சொல் நிகழ்ச்சி சிறிது உளதாயினும், முடிவில் சொல்லற்றதாகிய பேரொளியாம் பரசிவம் அனுபவப்பட்ட அந்நிலை, உலக வாசனை முழுதும் அற்றுச் சூக்குமத்திலும் சூக்குமமாய் விளங்க, `அவ்விடத்தில் அனைத்துப் பொருட்கும் அப்பாற்பட்ட அந்தப் பரசிவமே தனது பேரருள் காரணமாகக் குறுமூர்த்தியாய் வந்து தனக்கு அருள் செய்தது` என்னும் உண்மையும் விளங்கும்.Special Remark:
``தற்பதம்`` என்பதன்பின் `முதலிய` என்பது வருவித்து, `சொல்லால் நிகழும்` என உருபும், பயனும் விரிக்க. `முத்துரியத்துள்` என `உள்` என்பது விரிக்க. போல் அசை, ``பரம்`` என்பதன் பின் `வெளிப்பட`, என்பதும், `அதிசூக்கம்` என்பதன்பின் `ஆக` என்பதும், ஈற்றில் `ஆம்` என்பதும் வருவிக்க.இதனால், முத்துரியத்துள் முடிநிலைத் துரியத்தின் உயர்வுகூறி முடிக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage