
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 22. முத்துரியம்
பதிகங்கள்

அறிவாய் அசத்தென்னும் ஆறா றகன்று
செறிவாய மாயை சிதைத்(து) அரு ளாலே
பிறயாத பேரரு ளாயிடும் பெற்றி
நெறியான அன்பர் நிலையறிந் தாரே.
English Meaning:
The Holy WayBecome Knowledge;
Away with Tattvas six times six
That Asat (unreal) are;
Crush the crowding Maya
With Lord`s Grace;
Then will be the Divine Grace abiding;
That way, the holy ones knew.
Tamil Meaning:
சடங்களாகிய முப்பத்தாறு தத்துவங்களையும் நீக்கும் முகத்தால், அடர்ந்துள்ள மாயையைப் போக்கிச்சித்தாய் நின்றுபின்னர் வெளிப்படுகின்ற திருவருளாலே அதுவேயாய் நிற்கின்ற தன்மையால் உயர் நெறியை அடைந்த அன்பர்களே சிவனது இயல்பை உண்மையாக உணர்ந்தோராவர்.Special Remark:
``அறிவாய்`` என்பதை, `சிதைத்து` என்பதன் பின்னர்க் கூட்டுக. ``அசத்து`` எனவே, அசித்தாதலும் சடம் என்பதும் பெறப் பட்டது. `அருளாலே அருளாய்`` என்றதனால், `அருள் தானே வெளிப் பட, அதனாலே ஆன்மா அந்த அருளேயாய் நிற்கும்` என்பதும், `ஆறா றகன்று அறிவாய் அருளாயிடும்` என்றனால், `அருள் வெளிப்படல் ஆன்மா அறிவான பின்னர் ` என்பதும், `ஆன்மா அறிவாதல் ஆறாறகன்றபின்னும்` என்பதும் பெறப்பட்டன. ``ஆறாறகன்று`` என்பது தத்துவசுத்தி ஆன்ம ரூபங்களையும், ``அறிவாய்`` என்றது ஆன்ம தரிசன சிவரூபங்களையும், ``அருளாலே அருளாயிடும்`` என்றதனால், ஆன்ம சுத்தி, சிவதரிசன சிவயோகங் களையும் குறித்தமை காண்க. இவற்றுள் சிவயோகமே சிவதுரியமாம். `பெற்றியால்` என உருபு விரிக்க.இதனால், `சீவ துரியத்திற்கு அப்பாற்பட்ட சிவதுரியமே சிவத்தோடு உண்மையில் தொடர்பு கொள்ளும் நிலை` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage