
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 31. போதன்
பதிகங்கள்

சிவமா கியஅருள் நின்றறிந் தோரார்
அவமாம் மலம்ஐந்தும் ஆவதறியார்
தவமான செய்து தலைப்பறி கின்றார்
நவமான தத்துவம் நாடகி லாரே.
English Meaning:
Lord is TruthThey know Him not as Grace that is Siva,
They know not the Malas (Impurities) Five to rid of,
They perform penance diverse,
And are in distraction lost,
They seek not the Tattva (Truth),
That is ever New.
Tamil Meaning:
பிற ஆகமங்களிலன்றிச் சைவாகமங்களில் சொல்லப்படுகின்ற தத்துவங்களின் உயர்வை உணர்ந்து அவற்றைத் தெளியமாட்டாதவர் சிவமுதற் பொருளையும், அதனது ஆற்றலின் சிறப்பையும் உணர்ந்து அதிலே பழகியறியார். அதனால் அவர் உயிர் பஞ்ச மலங்களால் போதம் இழந்து நிற்றலையும் உணர மாட்டார். பிற பிற சமய நூல்களில் எல்லாம் சொல்லப்படுகின்ற தவங்களைச் செய்து, தாம் அடையவேண்டிய பயனை அடையாது இளைக்கின்றவ ராகின்றனர்.Special Remark:
``சிவமாகிய அருள்`` என்றதனை இரட்டுற மொழிந்து, `சிவம்தான் அதுவாகிய அருள்` என்றும், தான் சிவமே ஆகிய அருள்` என்றும் இரு பொருள் கொள்க. கொள்ளவே சிவமே அருளாயும், அருளே சிவமாயும் நிற்றல் பெறப்படும். ``அறிந்து ஓரார்`` என்பதனை, `ஓர்ந்து அறியார்` என மாற்றியுரைக்க. இந்நிலை சைவ தத்துவத்தை உணர்ந்தார்க்கல்லது. `ஏனையோர்க்கு உணரவாராது` என்பதே முதல் அடியால் கூறப்பட்டது.ஆன்ம லாபத்தை அடையவொட்டாமல் ஆன்மாவைத் தடுப்பனவாகிய மலங்கள் ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி - என ஐந்து உளவாதலையும் அவர் அறியமாட்டார். அதனால் அவற்றை நீக்குமாற்றினையும் அறிந்து அவ்வழியில் முயலார். பிற சமயங்களில் சொல்லப் பெறுகின்ற தவங்கள் சிவ ஞானத்தைப் பயவா ஆதலின் அவற்றைச் செய்வோர் சிவனது திருவருளை அடைதலாகிய தலையாகிய பயனை எய்தாது பிறவிக் குழியினின்றும் ஏறமாட்டாதவராவர் என்பதாம். ``தலைப்பறிகின்றார் என்றது தலைப்பறியை எய்துகின்றார் எந்றபடி. தலைப்பறி - தலைபோலும் முடிநிலைப் பயனை இழத்தல். நவம் - புதுமை. அது பிற நூல்களில் காணப்பபடாத சிறப்பினைக் குறித்தது. ஈற்றடியை முதலில் வைத்துப் பொருள் கொள்க.
இதனால், போதராகாதாரது இயல்பு கூறும் எதிர் மறை முகத்தால் போதன் ஆமாறும், அதன் உயர்வும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage