
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 16. பிட்சா விதி
பதிகங்கள்

மெய்யக ஞானம் மிகத்தெளிந் தார்களும்
கையகம் நீட்டார் கடைத்தலைக் கேசெல்லார்
ஐயம் புகாமல் இருந்த தவசியர்
வையக மெல்லாம் வரஇருந் தாரே.
English Meaning:
World Seeks to feed; Tapasvins do not Beg for a LivingThough they received the clear light of Jnana,
Yet they perforce seek portals of the bounteous for alms;
To these Tapasvins that beg not for a living,
All the world in reverence repairs.
Tamil Meaning:
இருந்த இடத்திலேயிருக்கும் யோகிகள் வறியவர் இரக்கும் இரவிற்குத் தாம் செல்லாமல், உலகத்தில் உள்ளவர்கள் எல்லாம் தம்பால் வந்து தம்மை வழிபடும்படி இருப்பார்கள். அங்ஙனமாயின், `ஞானத்தில் மிகுந்தவர் இரத்தலைச் செய்யார்` என்பது சொல்ல வேண்டுமோ!Special Remark:
`கையகம் நீண்டார் கடைத்தலைக்கே செல்வர்` என்பது பாடமன்று. மூன்றாம் அடிமுதலாகத் தொடங்கி உரைக்க. `அகங்கை` எனப் பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகையாய் வருவது இங்கு நேரே ``கையகம்`` என்றே வந்தது. மௌனம் உடையாரை, `வாய் திறவார்` என்றல்போல, இரவாத வரை. ``கையகம் நீட்டார்`` என்றார், `வாயிற்படி` எனப் பொருள் தரும், கடைத்தலை என்னும் பால்பகா அஃறிணைப் பெயர் இங்குப் பன்மையாய் நின்றது. ஐயம் வறியோர் இரவும், பிச்சை உயர்ந்தோர் ஏற்கும் தானமும் ஆதல் அறிக.இதனால், சிவனடியார் எஞ்ஞான்றும் இரவார் என்பது கூறி முடிக்கப்பட்டது. இறுதி மூன்று மந்திரங்களும் சிவனடியாருள் அதிதீவிர நிலை உடையாரது செயலே கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage