
ஓம் நமசிவாய
The Next Song will be automatically played at the end of each song.
Tandhiram
Padhigam
- மூன்றாம் தந்திரம் - 1. அட்டாங்க யோகம்
- மூன்றாம் தந்திரம் - 2. இயமம்
- மூன்றாம் தந்திரம் - 3. நியமம்
- மூன்றாம் தந்திரம் - 4. ஆதனம்
- மூன்றாம் தந்திரம் - 5. பிராணாயாமம்
- மூன்றாம் தந்திரம் - 5. பிராணாயாமம்
- மூன்றாம் தந்திரம் - 6. பிரத்தியாகாரம்
- மூன்றாம் தந்திரம் - 7. தாரணை
- மூன்றாம் தந்திரம் - 8. தியானம்
- மூன்றாம் தந்திரம் - 9. சமாதி
- மூன்றாம் தந்திரம் - 10. அட்டாங்க யோகப் பேறு
- மூன்றாம் தந்திரம் - 11. அட்டமா சித்தி
- மூன்றாம் தந்திரம் - 12. கலைநிலை
- மூன்றாம் தந்திரம் - 13. காரியசித்தி
- மூன்றாம் தந்திரம் - 13. காய சித்தி உபாயம்
- மூன்றாம் தந்திரம் - 14. கால சக்கரம்
- மூன்றாம் தந்திரம் - 15. ஆயுள் பரீட்சை
- மூன்றாம் தந்திரம் - 16. வார சரம்
- மூன்றாம் தந்திரம் - 17. வார சூலம்
- மூன்றாம் தந்திரம் - 18. கேசரி யோகம்
- மூன்றாம் தந்திரம் - 19. பரியங்க யோகம்
- மூன்றாம் தந்திரம் - 20. அமுரி தாரணை
- மூன்றாம் தந்திரம் - 21. சந்திரயோகம்
Paadal
-
1. சமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும்
சமாதி யமாதியிற் றானெட்டுச் சித்தி
சமாதி யமாதியிற் றங்கினோர்க் கன்றே
சமாதி யமாதி தலைப்படுந் தானே.
-
10. கற்பனை யற்றுக் கனல்வழி யேசென்று
சிற்பனை எல்லாஞ் சிருட்டித்த பேரொளிப்
பொற்பனை நாடிப் புணர்மதி யோடுற்றுத்
தற்பர மாகத் தகுந்தண் சமாதியே.
-
11. தலைப்பட் டிருந்திடத் தத்துவங் கூடும்
வலைப்பட் டிருந்திடும் மாதுநல் லாளும்
குலைப்பட் டிருந்திடும் கோபம் அகலும்
துலைப்பட் டிருந்திடந் தூங்கவல் லார்க்கே.
-
12. சோதித் தனிச்சுட ராய்நின்ற தேவனும்
ஆதியும் உள்நின்ற சீவனு மாகுமால்
ஆதிப் பிரமன் பெருங்கடல் வண்ணனும்
ஆதி அடிபணிந் தன்புறு வாரே.
-
13. சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகம்
சமாதிகள் வேண்டா இறையுட னேகில்
சமாதிதா னில்லை தானவ னாகில்
சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே.
-
2. விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடிற்
சந்தியி லான சமாதியிற் கூடிடும்
அந்த மிலாத அறிவின் அரும்பொருட்
சுந்தரச் சோதியுந் தோன்றிடுந் தானே.
-
3. மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு
மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை
மன்மனத் துள்ளே மகிழ்ந்திருப் பார்க்கு
மன்மனத் துள்ளே மனோலய மாமே.
-
4. விண்டலர் கூபமும் விந்தத் தடவியுங்
கண்டுணர் வாகக் கருதி யிருப்பர்கள்
செண்டு வெளியிற் செழுங்கிரி யத்திடை
கொண்டு குதிரை குசைசெறுத் தானே.
-
5. மண்டலம் ஐந்து வரைகளும் ஈராறு
கொண்டிட நிற்குங் குடிகளும் ஆறெண்மர்
கண்டிட நிற்குங் கருத்து நடுவாக
உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே.
-
6. பூட்டொத்து மெய்யிற் பொறிப்பட்ட வாயுவைத்
தேட்டற்ற அந்நிலஞ் சேரும் படிவைத்து
நாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத்
தோட்டத்து மாம்பழந் தூங்கலு மாமே.
-
7. உருவறி யும்பரி சொன்றுண்டு வானோர்
கருவரை பற்றிக் கடைந்தமு துண்டார்
அருவரை யேறி அமுதுண்ண மாட்டார்
திருவரை யாமனந் தீர்ந்தற்ற வாறே.
-
8. நம்பனை ஆதியை நான்மறை ஓதியைச்
செம்பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை
அன்பினை யாக்கி அருத்தி ஒடுக்கிப்போய்க்
கொம்பேறிக் கும்பிட்டுக் கூட்டமிட் டாரே.
-
9. மூலத்து மேலது முற்சது ரத்தது
காலத் திசையிற் கலக்கின்ற சந்தினில்
மேலைப் பிறையினில் நெற்றிக்குநேர் நின்ற
கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே.