
ஓம் நமசிவாய
The Next Song will be automatically played at the end of each song.
Tandhiram
Padhigam
- நான்காம் தந்திரம் - 1. அசபை
- நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்
- நான்காம் தந்திரம் - 3. அருச்சனை
- நான்காம் தந்திரம் - 4. நவகுண்டம்
- நான்காம் தந்திரம் - 5. சத்திபேதம்
- நான்காம் தந்திரம - 6.வயிரவி மந்திரம்
- நான்காம் தந்திரம் - 7. பூரண சத்தி
- நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம்
- நான்காம் தந்திரம் - 9. ஏரொளிச் சக்கரம்
- நான்காம் தந்திரம் - 10. வயிரவச் சக்கரம்
- நான்காம் தந்திரம் - 11. சாம்பவி மண்டலச் சக்கரம்
- நான்காம் தந்திரம் - 12. புவனாபதிச் சக்கரம்
- நான்காம் தந்திரம் - 13. நவாக்கரி சக்கரம்
Paadal
-
1. அறிந்த பிரதமையோ டாறும் அறிந்து
அறிந்த அச்சத்தமி மேலவை குற்ற
அறிந்தவை ஒன்றுவிட் டொன்றுபத் தாக
அறிந்த வலமது வாக நடத்தே. -
2. நடந்த வயிரவன் சூல கபாலி
கடந்த பகைவனைக் கண்ணது போக்கித்
தொடர்ந்த உயிரது உண்ணும் பொழுது
படர்ந்த உடல்கொடு பந்தாடல் ஆமே. -
3. ஆமேவப் பூண்டருள் ஆதி வயிரவன்
ஆமே கபாலமும் சூலமும் கைக்கொண்டங்கு
ஆமே தமருக பாசமும் கையது
ஆமே சிரத்தொடு வாளது கையே.
-
4. கையவை ஆறும் கருத்துற நோக்கிடு
மெய்யது செம்மை விளங்கு வயிரவன்
துய்ய ருளத்தில் துலங்குமெய் உற்றத்தாப்
பொய்வகை விட்டுநீ பூசனை செய்யே. -
5. பூசனை செய்யப் பொருந்திஓர் ஆயிரம்
பூசனை செய்ய அதுஉடன் ஆகுமால்
பூசனை சாந்துசவ் வாது புழுகுநெய்
பூசனை செய்துநீர் பூசலை வேண்டுமே. -
6. வேண்டிய வாறு கலகமும் ஆயிடும்
வேண்டிய ஆறினுள் மெய்யது பெற்றபின்
வேண்டிய ஆறு வரும்வழி நீநட
வேண்டிய வாறது வாகும் கருத்தே.