
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 10. வயிரவச் சக்கரம்
பதிகங்கள்

பூசனை செய்யப் பொருந்திஓர் ஆயிரம்
பூசனை செய்ய அதுஉடன் ஆகுமால்
பூசனை சாந்துசவ் வாது புழுகுநெய்
பூசனை செய்துநீர் பூசலை வேண்டுமே.
English Meaning:
The Way of Bhairava WorshipWorship Him,
Perform a thousand worships
With dance and drink
With sandal paste, and fragrant incense
With musk, civet scent and unguents several
Worship thus and pray
He fights your enemy.
Tamil Meaning:
வயிரவ வழிபாட்டினைச் செய்ய விரும்பினால், மேற்கூறிய வயிரவச் சக்கரத்தினை மேற்கூறிய வகையில் ஓர் ஆயிரம் நாள் வழிபடல் வேண்டும். வழிபடின் அச்சக்கர வழிபாட்டின் பயன் கூடுவதாகும். அவ்வழிபாட்டினை, சந்தனம், சவ்வாது, புனுகு, நெய் என்னும் இவைகளைச் சிறப்பாகக் கொண்டு செய்து. அது நிறை வெய்திய பின் பகைவர்பால் உங்கள் பகையைப் புலப்படுத்திக் கொள்ளுங்கள்.Special Remark:
`அவ்வாறு செய்தால் வெற்றி கிடைக்கும்` என்பது குறிப்பெச்சம். வாம மார்க்கத்தை விரும்புவார் இதன் இரண்டாம் அடியை `மதுவுடன் ஆகுமால்` எனப் பாடம் ஓதுவர்.இதனால், வயிரவ வழிபாட்டு முறை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage