
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 10. வயிரவச் சக்கரம்
பதிகங்கள்

ஆமேவப் பூண்டருள் ஆதி வயிரவன்
ஆமே கபாலமும் சூலமும் கைக்கொண்டங்கு
ஆமே தமருக பாசமும் கையது
ஆமே சிரத்தொடு வாளது கையே.
English Meaning:
Bhairava`s FormThe Primal Bhairava
That comes to bless the Jiva
Holds the skull and trident in His hands,
He holds the drum and the noose too
And the severed head and sword as well.
Tamil Meaning:
நரசிங்கன், திரிவிக்கிரமன் இவர்களது தோலைப் போர்த்துள்ள ஆதி வயிரவர் மேற்கூறிய சூல கபாலங்களைச் சிறப்பாக ஏந்தி விளங்குவார். இனித் தமருகம், பாசம், வெட்டப்பட்ட தலை, வாள் என்னும் இவைகளையும் அவர் கொண்டிருப்பார்.Special Remark:
`ஆகம் மேவ\\\" என்பது குறைந்து நின்றது. ஆகம் - உடம்பு; தோல்; ஆகுபெயர். \\\"ஆகம்\\\" என்றதனை வயிரவருடைய தாக்கி, திருமேனியில் எலும்பு முதலியவைகளை விரும்பிப்பூண்ட என உரைத்தலுமாம். இதில் பூணுதற்குச் செயப்படுபொருள் ஆற்றலால் கொள்ளப்படும். இரண்டாம் அடி முதலிய மூன்றனையும் \\\"ஆமே\\\" என்பவற்றோடு முன்னே கூட்டி முடிக்க. அவ்விடத்து முதற்கண் நின்றது வயிரவரது செயலாம்.இதனால், வயிரவரது கையில் உள்ள படைக்கலம் முதலியவை கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage