
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 10. வயிரவச் சக்கரம்
பதிகங்கள்

நடந்த வயிரவன் சூல கபாலி
கடந்த பகைவனைக் கண்ணது போக்கித்
தொடர்ந்த உயிரது உண்ணும் பொழுது
படர்ந்த உடல்கொடு பந்தாடல் ஆமே.
English Meaning:
Bhairava Destroys Your EnemyAs you worship Bhairava thus
The God appears with trident and skull,
He blinds the eyes of your enemy
He drinks his life,
And with your enemy`s body you may play as with a ball.
Tamil Meaning:
இச்சக்கரத்தில் விளங்கும் வயிரவ மூர்த்தி, சிறப்பாகச் சூல கபாலங்களை ஏந்திய வேக வடிவத்தினர். அதனால், அவர் தம் அடியவரை வென்ற பகைவரைத் தாம் போர்ச்சூழ்ச்சி அற்றவராகச் செய்து, அவர்தம் உயிரையும் போக்கித் தமது வெற்றிக்கு அறிகுறியாக அவர்களது உயிர் நீங்கிய உடலங்களைப் பந்துபோல எறிந்து வீர விளையாட்டுச் செய்தருளுவார்.Special Remark:
கண், இங்கே, அறிவு. ``பகைவர்`` என்றது அடியவர் தவச் செயலுக்குப் பகையாய் நிற்பவரை.``ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்`` 1
என்னும் திருக்குறள் உரையில் பரிமேலழகரும், ``ஒன்னார், உவந்தார்`` எனப்பட்டவரை, ``தம் அறத்
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage