
ஓம் நமசிவாய
The Next Song will be automatically played at the end of each song.
Tandhiram
Padhigam
- ஒன்பதாம் தந்திரம் - 1. குருமட தரிசனம்
- ஒன்பதாம் தந்திரம் - 2. ஞானகுரு தரிசனம்
- ஒன்பதாம் தந்திரம் - 3. பிரணவ சமாதி
- ஒன்பதாம் தந்திரம் - 4. ஒளிவகை
- ஒன்பதாம் தந்திரம் - 5. பஞ்சாக்கரம் - தூலம்
- ஒன்பதாம் தந்திரம் - 6. பஞ்சாக்கரம் - சூக்குமம்
- ஒன்பதாம் தந்திரம் - 7. அதி சூக்கும பஞ்சாக்கரம்
- ஒன்பதாம் தந்திரம் - 8. காரண பஞ்சாக்கரம்
- ஒன்பதாம் தந்திரம் - 9. மகா காரண பஞ்சாக்கரம்
- ஒன்பதாம் தந்திரம் - 10. திருக்கூத்து
- ஒன்பதாம் தந்திரம் - 11. சிவானந்தக் கூத்து
- ஒன்பதாம் தந்திரம் - 12. சுந்தரக் கூத்து
- ஒன்பதாம் தந்திரம் - 13. பொற்பதிக் கூத்து
- ஒன்பதாம் தந்திரம் 14. பொற்றில்லைக் கூத்து
- ஒன்பதாம் தந்திரம் - 14. பொற்றில்லைக் கூத்து
- ஒன்பதாம் தந்திரம் - 15. அற்புதக் கூத்து
- ஒன்பதாம் தந்திரம் - 16. ஆகாசப் பேறு
- ஒன்பதாம் தந்திரம் - 17. ஞானோதயம்
- ஒன்பதாம் தந்திரம் - 18. சத்திய ஞானானந்தம்
- ஒன்பதாம் தந்திரம் - 19. சொரூப உதயம்
- ஒன்பதாம் தந்திரம் - 20. ஊழ்
- ஒன்பதாம் தந்திரம் - 21. சிவ ரூபம்
- ஒன்பதாம் தந்திரம் - 22. சிவ தரிசனம்
- ஒன்பதாம் தந்திரம் - 23. முத்தி பேதம் கரும நிருவாணம்
- ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை
- ஒன்பதாம் தந்திரம் - 25. மோன சமாதி
- ஒன்பதாம் தந்திரம் - 26. வரையுரை மாட்சி
- ஒன்பதாம் தந்திரம் - 27. அணைந்தோர் தன்மை
- ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்
- ஒன்பதாம் தந்திரம் - 29. சருவ வியாபகம்
Paadal
-
1. எளிய வாதுசெய் வார்எங்கள் ஈசனை
ஒளியை உன்னி உருகும் மனத்தராய்த்
தெளியவே ஓதின் சிவாயநம என்னும்
குளிகையை இட்டுப்பொன் னாக்குவான் கூட்டையே.
-
2. தெள்ளமு தூறச் சிவாய நமவென்(று)
உள்ளமு தூற ஒருகால் உரைத்திடும்
வெள்ளமு தூறல் விரும்பிஉண் ணாதவர்
துள்ளிய நீர்போற் சுழல்கின்ற வாறே.
-
3. சிவன் சத்தி சீவன் செறுமலம் மாயை
அவம் சேர்த்த பாசம் மலம்ஐந் தகலச்
சிவன்சத்தி தன்னுடன் சீவனார் சேர
அவம் சேர்த்த பாசம் அணுககி லாவே.
-
4. சிவனரு ளாய சிவன்திரு நாமம்
சிவன் அருள் ஆன்மாத் திரோதம் மலமாய்ச்
சிவன்முத லாகச் சிறந்து நிரோதம்
பவம தகன்று பரசிவ னாமே.
-
5. நமாதி நனாதி திரோதாயி யாகித்
தமாதிய தாய்நிற்கத் தாள்அந்தத் துற்றுச்
சமாதித் துரியந் தமதாகம் ஆக
நமாதி சமாதி சிவஆதல் எண்ணவே.