
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 6. பஞ்சாக்கரம் - சூக்குமம்
பதிகங்கள்

சிவனரு ளாய சிவன்திரு நாமம்
சிவன் அருள் ஆன்மாத் திரோதம் மலமாய்ச்
சிவன்முத லாகச் சிறந்து நிரோதம்
பவம தகன்று பரசிவ னாமே.
English Meaning:
The Five Letters Denote the Five Relations in the Liberation ProcessThe Five-lettered name of Siva (Sivayanama)
Is Siva-Sakti (Grace);
Si for Siva, Va for Sakti,Ya for Jiva,
Na for Tirodayi and Ma for Maya (impure);
Thus the Five Letters, five relations denote;
As you chant with Si first (that is as Si Va Ya Na Ma)
You are of Karmas freed;
Births no more will be
You shall Para-Siva become.
Tamil Meaning:
(சிவனுடையனவாகச் சொல்லப்படுகின்ற பொருள்கள் அனைத்தும் அவனது அருளேயாகலின்) அவனது திருப் பெயராகிய திருவைந்தெழுத்தும் அவனது அருளேயாகும். அதில் சிகாரம் முதலிய எழுத்துக்கள் மேற்கூறியவாறு, `சிவன், அருட்சத்தி, சீவான்மா, திரோதான சத்தி, ஆணவ மலம்` எனஅபவற்றைக் குறித்து நிற்குமிடத்து அவ்வெழுத்துக்கள் சிகாரம் முதலாக நின்று முத்திக்கு வழி யாகும். (ஆகவே `நகாரம் முதலாக நிற்பின் அஃது அத்தன்மையது ஆகாது` என்றதாயிற்று) அதனால், சிகாரம் முதலாகக் கொண்டு கணிக் -கின், அவ்வாறு கணிப்பவன் பிறவியினின்றும் நீங்கிச் சிவனாவான்.Special Remark:
முன் இரண்டடிகளால், முன் மந்திரத்தில் கூறியதனையே அனுவதித்துக் கூறினார். அது முத்தி நெறி ஆதலைக் கூறுதற் பயன் நோக்கி, உண்மை விளக்கத்திலும்,``நம்முதலா ஓங்கிஅருள் நாடாது, நாடும்அருள்
சிம்முதலா ஓதுநீ சென்று``2
``அண்ணல் முதலா அழகார் எழுத்தைந்தும்
எண்ணில், இராப்பகல்அற் றின்பத்தே - நண்ணி
அருளா னதுசிவத்தே ஆக்கும் அணுவை,
இருளா னதுதீர இன்று``
ஆதி, மலம்இரண்டும் ஆதியா ஓதினாவ்
சேதியா மும்மலமும் தீர்வாகா``3
என்றும், (ஆதி, திரோதான சத்தி) சிவப்பிரகாசத்தில்,
``ஆசுறு திரோதம் மேவா(து)
அகலுமா சிவம்முன் னாக
ஓசைகொள்அதனில் நம்மேல்
ஒழித்(து) அருள் ஓங்கும்``*
என்றும்,
திருவருட் பயனில்,
``மாலார் திரோதம் மலம் முதலாய் மாறுமோ,
மேலாசி மீளா விடின்``
``சிவம் முதலே ஆமாறு சேருமேல் தீரும்
பவம்; இதுநீ ஓதும் படி``*
என்றும் எல்லா இடத்திலும் இவ்வாறே கூறப்பட்டன.
`சிறந்த`` என்னும் செய்தென் எச்சம் காணப் பொருளில் வந்தது. நிரோதம் - நீக்கம்; பாச நீக்கம். நிரோதம் ஆம்` எனப் பயனிலை வருவித்து முடிக்க. ``அகன்று ஆம்`` என்பதற்கு சீவன் என்னும் எழுவாய் வருவிக்க.
இதனால் சுக்கும பஞ்சாக்கரம் முத்தி நெறியாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage