
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 6. பஞ்சாக்கரம் - சூக்குமம்
பதிகங்கள்

தெள்ளமு தூறச் சிவாய நமவென்(று)
உள்ளமு தூற ஒருகால் உரைத்திடும்
வெள்ளமு தூறல் விரும்பிஉண் ணாதவர்
துள்ளிய நீர்போற் சுழல்கின்ற வாறே.
English Meaning:
Chant Sivaya Nama in God-LoveChant that mantra Sivaya Nama once,
Your heart welling up in God-Love;
Then will transparent ambrosia within you well up;
They who seek not that pure ambrosia to drink
Will be like bubbles of a water-fall,
That know rest none from birth`s whirl, ever.
Tamil Meaning:
புறத்தில் தெளிவான அமுதமான கண்ணீர் கரந்து பாயவும், அகத்தில் அன்பு பெருகவும் சிவாயநம` என்று ஒருமுறை சொல்வதால் உண்டாகும் இன்பமாகிய அமுத வெள்ளத்தை உண்ண விரும்பாதவர்கள் பெருங்காற்றில் அகப்பட்ட மழைத்துளிபோல அடையும் இடம் அறியாது அலமருதல் இரங்கத்தக்கது.Special Remark:
``உள் அமுது`` என்றது அன்பினை ``அமுது ஊற`` என்பதையும் ``தெள்ளமுதூற`` என்பதனோடு இயைக்க. உரைத்திடும் அமுது - உரைத்தலால் விளையும் அமுதம் `வெள்ள அமுது` என்பதில் அகரம் தொகுத்தலாயிற்று. ``விரும்பி உண்ணாதவர்`` என்றாராயினும் `உண்ண விரும்பாதவர்` என்றலே கருத்தென்க. ``துள்ளிய நீர்`` என்பதற்கு ஆற்றல் பற்றி இவ்வாறு உரைக்கப்பட்டது, இறுதியில் `இரங்கத் தக்கது` என்னும் சொல்லெச்சம் வருவிக்கப்பட்டது.இதனால், பஞ்சாக்கரத்தைச் சூக்குமமாக வைத்து ஓதுவார் சிறந்த பயனை அடைதல் எதிர்மறை முகத்தால் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage