ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. செத்தில்என் சீவில்என் செஞ்சாந் தணியில்என்
    மத்தகத் தேஉளி நாட்டி மறிக்கில் என்
    வித்தக நந்தி விதிவழி யல்லது
    தத்துவ ஞானிகள் தன்மைகுன் றாரே.
  • 2. தான்முன்னம் செய்த விதிவழி தான் அல்லால்
    வான்முன்னம் செய்தங்கு வைத்ததோர் மாட்டில்லை
    கோன்முன்னம் சென்னி குறிவழி யேசென்று
    நான்முன்னம் செய்ததே நன்னிலம் ஆயதே.
  • 3. ஆறிட்ட நுண்மணல் ஆறே சுமவாதே
    கூறிட்டுக் கொண்டு சுமந்தழி வாரில்லை
    நீறிட்ட மேனி நிமிர்சடை நந்தியை
    பேறிட்டென் உள்ளம் பிரயகி லாதே.
  • 4. வானின் றிடிக்கில்என் மாகடல் பொங்கில்என்
    கானின்ற செந்தீக் கலந்துடன் வேகில்என்
    தானொன்றி மாருதம் சண்டம் அடிக்கில்என்
    நானொன்றி நாதனை நாடுவன் நானே.
  • 5. ஆனை துரத்தில்என் அம்பூ டறுக்கில்என்
    கானத் துழுவை கலந்து வளைக்கில்என்
    ஏனைப் பதியினில் எம்பெரு மான்வைத்த
    ஞானத் துழவினை நான்உழு வேனே.
  • 6. கூடு கெடின்மற்றோர் கூடுசெய் வான்உளன்
    நாடு கெடினும் நமர்கெடு வாரில்லை
    வீடு கெடின்மற்றோர் வீடுபுக் காலொக்கும்
    பாடது நந்தி பரிசறி வார்கட்கே.