
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 20. ஊழ்
பதிகங்கள்

கூடு கெடின்மற்றோர் கூடுசெய் வான்உளன்
நாடு கெடினும் நமர்கெடு வாரில்லை
வீடு கெடின்மற்றோர் வீடுபுக் காலொக்கும்
பாடது நந்தி பரிசறி வார்கட்கே.
English Meaning:
Jnanis Are UnconcernedIf this body to harm comes
There is One to fashion another;
If a land to destruction goes,
There is another land to migrate to;
If a house to pieces falls,
There is another house to dwell;
—Thus do their thoughts, unconcerned run,
Who Nandi`s bounty know.
Tamil Meaning:
குருவருள் வாய்க்கப்ப பெற்றவர்கட்கு, `ஓர் உயிரின் உடம்பு அழிந்துவிட்டால், மற்றோர் உடம்பை அவைகட்குப் படைத்துக் கொடுக்க ஒருவன் இருக்கின்றான்` என்பது தெளிவாம். ஆதலால், `இறப்பு` என்பது அவர்கள் உள்ளத்திற்கு. `உயிர்கள் அழிந்துபோவதன்று; மற்று, ஒருநாடு எவையேனும் காரணத்தால் அழிவுறுமாயின், அதில் உள்ளவர்கள் வேறு நாட்டில் சென்று வாழ்தல் போல்வதும், ஓர் இல்லம் இடிந்து பாழாயின், அதில் வாழ்ந்தவர்கள் வேறோர் இல்லத்தில் குடிபுகுதல் போல்வதுமேயாகும்.Special Remark:
ஆகவே அவர்கள், உயிர்கள் எடுத்த பிறப்பில் அனுபவிக்கும் இன்பத் துன்பங்கள் அவை முற்பிறப்புக்களில் செய்த வினையின் பயனே` எனத் தெளிந்து, அனைத்துயிர்கட்கும் அவற்றின் வினைப் பயனை ஊட்டுவிக்கின்ற முதல்வன் திருவருளை உணர்ந்து நிற்குமாற்றால் தங்கள் ஊழினை வென்றிருப்பார்கள் என்பது கருத்து. ``நந்தி பரிசறிவார்க்கு`` என்பதை முதலிற் கூட்டி, ``உளன்`` என்பதன்பின் `ஆம்` என்னும் சொல்லெச்சம் வருவித்து, ``ஒக்கும்`` என்பதை, ``இல்லை`` என்பதனோடும் இயைத்து, `பாடு இல்லை ஒக்கும்` என முடிக்க. ``இல்லை`` என்பது பண்பு; முற்றன்று. பாடு - இறப்பு. அது, பகுதிப்பொருள் விகுதி.இதனால், `முன் மந்திரத்தில் ஊழை வெல்லுதற்குத் தாம் செய்யும் செயலையே ஞானிகள் செய்து ஊழை வெல்வர்` என்பது குறிப்பால் உணர்த்தி முடிக்கப்பட்டது. ஆகவே மேற்கூறியபடி வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாயும் இதன்கண் அமைந்ததாம்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage