
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 20. ஊழ்
பதிகங்கள்

செத்தில்என் சீவில்என் செஞ்சாந் தணியில்என்
மத்தகத் தேஉளி நாட்டி மறிக்கில் என்
வித்தக நந்தி விதிவழி யல்லது
தத்துவ ஞானிகள் தன்மைகுன் றாரே.
English Meaning:
Understand Fate`s Working; Jnanis are not ThwartedWhat though you cut them, chop them,
And with chistle their heads hammer,
Or with cool sandal paste soften them?
All these are but by Fate, Nandi decreed,
Thus realizing they impassive remain,
They, the Holy Jnanis, that Truth perceived.
Tamil Meaning:
தங்கள் உடம்பைப் பிறர் செத்தினால் தான் என்ன? சீவினால்தான் என்ன? உச்சந் தலையிலே உளியை நாட்டி அடித்தால்தான் என்ன? இவ்வாறன்றி சிவந்த சந்தனத்தைக் குளிர்ச்சியாகப் பூசினால்தான் என்ன? மெய்யுணர்வு எய்தினோர் ஞானகுரு உபதேசித்த உபதேச வழியில் நிற்றல் அல்லது, அதனினின்றும் பிறழார்.Special Remark:
செத்துதல் - ஆழப் போழ்தல். சீவுதல் - மேற்போக்காப் போழ்தல். இவ்விரண்டிற்கும் வினைமுதலும் செயப்படுபொருளும் வருவிக்கப்பட்டன. மறித்தல் - அசையாதபடி தடுத்தல்; அஃது அறைதலைக் குறித்தது. மிகக் கொடிய துன்பங்கள் சிலவற்றைக் கூறும் முகத்தால் பல துன்பங்களையும் குறித்தவாறு. வித்தகம் - சதுரப்பாடு; அது ஞானம். தம் குருவாகிய நந்தி பெருமானைச் சுட்டினாராயினும், பொதுப்பட, `குரு` என்றலே கருத்து. விதி - நெறிமுறை. `நந்தி சொல்லிய நெறிமுறை` என்க. அஃது, `உனக்கு இப்பொழுது வரும் துன்ப இன்பங்கள் எல்லாம் நீ முன்பு எர் உடலில் நின்று செய்த வினை இவ்வுடலை வந்து பற்றுவனவே. ஆதலின் அவை பற்றி நீ கவலுதலோ` மகிழ்தலோ கூடாது` என்பது. இவ்விடத்தில்,``ஆனாச் செல்வத்து வானோர் இன்பம்
அதுவே எய்தினும் எய்துக; ... ... ...
வரையில் தண்டத்து மாறாக் கடுந்துயர்
நிரயம் சேரினும் சேர்க; உரையிடை
ஏனோர் என்னை ஆனாது விரும்பி,
`நல்லன்` எனினும் என்க; அவரே
`அல்லன்` எனினும் என்க; நில்லாத்
திருவொடு திளைத்துப் பெருவளம் சிதையாது
இன்பத் தழுந்தினும் அழுந்துக; அல்லாத்
துன்பம் துதையினும் துதைக; ... ... ஒன்றினும்
வேண்டலும் இலனே; வெறுத்தலும் இலனே,
ஆண்டகைக் குரிசல்நின் அடியரொடு குழுமித்
தெய்வக் கூத்தும், நின் செய்யப்பொற் பாதமும்
அடையவும், அணுகவும் பெற்ற
கிடையாச் செல்வம் கிடைத்த லானே``3
என்னும் அனுபவ மொழியையும்,
``கேடும், ஆக்கமும் கெட்ட திருவினார்;
ஓடும், செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்``9
என அவ்வனுபவம் உடையாரது இயல்பை எடுத்து விளக்கிய திருமொழியையும் ஒப்பு நோக்கி உணர்க.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage