ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. பத்துத் திசையும் பரம்ஒரு தெய்வமுண்டு
    எத்திக் கினில்இல்லை என்பது இனமலர்க்
    கொத்துத் திருவடி நீழல் சரண்எனத்
    தத்தும் வினைக்கடல் சாராது காணுமே.


    கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
    வானுறு மாமல ரிட்டு வணங்கினும்
    ஊனினை நீக்கி உணர்பவர்க் கல்லது
    தேனமர் பூங்கழல் சேரவொண் ணாதே.
  • 2. கோனக்கன் றாய குரைகழல் ஏத்துமின்
    ஞானக்கன் றாய நடுவே உழிதரும்
    வானக்கன் றாகிய வானவர் கைதொழும்
    ஆனைக்கன் றீசன் அருள்வெள்ள மாமே.
  • 3. இதுபணிந் தெண்டிசை மண்டல மெல்லாம்
    அதுபணி செய்கின் றவள்ஒரு கூறன்
    எதுபணி மானுடர் செய்பணி? ஈசன்
    பதிபணி செய்வது பத்திமை யாமே.
  • 4. பத்தன் கிரியை சரியை பயில்வுற்றுச்
    சுத்த அருளால் துரிசற்ற யோகத்தில்
    உய்த்த நெறியுற் றுணர்கின்ற ஞானத்தால்
    சித்தம் குருவரு ளால்சிவ மாகுமே.
  • 5. அன்பின் உருகுவன் ஆளும் பணிசெய்வன்
    செம்பொன்செய் மேனி கமலத் திருவடி
    முன்புநின் றாங்கே மொழிவ ணொனக்கருள்
    என்பினுட் சோதி இலிங்கம்நின் றானே.