
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 6. கிரியை
பதிகங்கள்

இதுபணிந் தெண்டிசை மண்டல மெல்லாம்
அதுபணி செய்கின் றவள்ஒரு கூறன்
எதுபணி மானுடர் செய்பணி? ஈசன்
பதிபணி செய்வது பத்திமை யாமே.
English Meaning:
Bhakti`s End is Lord`s AbodeShe fashioned this world
And all universe that fills space in directions eight
Her—He consorts, sharing Himself with Her
To adore Him is the duty of humans here below;
And that which does service a place in Lord`s Abode
Is Bhakti true.
Tamil Meaning:
உலகங்கள் அனைத்தையும் செயற்படுத்தலாகிய அச்செயலைச் செய்பவளாகிய அம்மையும் அதனைச் செய்தல் அவளை ஒரு கூற்றிலே உடைய சிவனிடத்து இக்கிரியைத் தொண்டைச் செய்தேயாம். அங்ஙனமாயின், `மக்கள் செய்யத் தக்க பணி` யாது என்பார்க்கு, பதியாகிய அவனிடத்துச் செய்யுங் கிரியையே` என்பது கூற வேண்டுமே! இனி, `பத்திமை` எனக் கூறப்படுவது இக்கிரியையேயாம்.Special Remark:
``பணிந்த`` என்பது, `பணியைச் செய்து` என இருசொல் நிலைமைத்தாய் நின்றது. `எண்டிசை மண்டலம் எல்லாம் செய் கின்றவள் அது பணி அவளொடு கூறன்பால் இது பணிந்து` எனக் கூட்டியுரைக்க. அம்மையும் இறைவனை வழிபட்டு வரம்பெற்றமை பல இடங்களில் வெளிப்படை. ``கூறன்`` என்பதில் ஏழாவது இறுதிக் கண்தொக்கது. மூன்றாம் அடியிலும் `இது பணி` என ஓதுதல் பாட மாகாது. `பதியாகிய ஈசன் பணி` எனக் கூட்டுக. `இது செய்வதே பத்திமை` என வேறு தொடராக்கியுரைக்க. சரியை முதலிய நான்கனுள் முன்னிரண்டும் `பத்திச் செயல்கள்` எனவும், பின்னிரண்டும், `ஞானச் செயல்கள்` எனவும் பொதுவாக வழங்கப்படுமாறு அறிக. இது வருகின்ற திருமந்திரத்தாலும் பெறப்படும்.இதனால், கிரியையது சிறப்புக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage