
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 6. கிரியை
பதிகங்கள்

அன்பின் உருகுவன் ஆளும் பணிசெய்வன்
செம்பொன்செய் மேனி கமலத் திருவடி
முன்புநின் றாங்கே மொழிவ ணொனக்கருள்
என்பினுட் சோதி இலிங்கம்நின் றானே.
English Meaning:
Daily I Beseech His GraceThe Lord is resplendent as pure gold
His Feet are like the lotus bloom
To them I pray: ``Lord, Grant me Your Grace!``
And in love I melt and daily adore;
And the Lord that is Light within my bones
Himself does reveal unto me.
Tamil Meaning:
செம்பொன்போலும் திருமேனியும், அதனுட் சிறப்பாகக் குறிக்கத் தக்க தாமரை மலர்போலும் திருவடிகளும் என் கண்முன் தோன்றினாற்போல, என் உடம்பகத்து இருதய கமலத்தில் ஒளியாய் விளங்குகின்ற சிவன், புறத்தில் இலிங்க மூர்த்தியிடமாக எனக்கு விளங்கிநிற்கின்றான். அதனால், அடியேன் அவன்மேல் வைத்த அன்பினால் மனம் நெகிழ்ந்து உருகுகின்றேன்; அவன் இடும் பணிகளைச் செய்கின்றேன்; எல்லாம் செய்து அவனை வேண்டுவது அவனது அருள் ஒன்றையே.Special Remark:
``மொழிவது எனக்கருள்`` என்பதை முதலடியின் இறுதி யிற் கூட்டி அஃது ஈறாக அனைத்தையும் ஈற்றில் வைத்து உரைக்க. ``செய்`` உவம உருபு. `இலிங்கு நின்றானே. இலங்குகின்றானே` என்பன பாடமல்ல. இடும்பணி, ஆகமத்தின் வழியாகப் பணித்த பணிகள். மோனை நயம் கருதாது, `நாளும் பணி செய்வன்` என்றலுமாம். இரண்டாம் அடி இன எதுகை.இதனால், இலிங்க மூர்த்தியில் சிவனை முடிமுதல் அடிகாறும் தோன்ற வெளிநிற்கப் பாவித்து வழிபடுதலே கிரியையாதலும், அது பயன் கருதாது அன்பே காரணமாகச் செய்யப்பட்ட வழியே உண்மை யாதலும் கூறப்பட்டன, ``என்பினுட் சோதி இலிங்கம் நின்றான்`` என்பதனால், கிரியையாளன் அவ்வாறு அகத்தும் புறத்தும் வழிபடல் வேண்டும் என்பதும் கூறியதாயிற்று.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage