
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 6. கிரியை
பதிகங்கள்

கோனக்கன் றாய குரைகழல் ஏத்துமின்
ஞானக்கன் றாய நடுவே உழிதரும்
வானக்கன் றாகிய வானவர் கைதொழும்
ஆனைக்கன் றீசன் அருள்வெள்ள மாமே.
English Meaning:
Bhakti Begets GraceThe Lord is your Guide,
Seek His feet as does the yearning calf,
He shall seat you amidst His children of Wisdom;
The Devas, the Beings of Heaven, bow low before Him;
Great is His love, as of the cow to her calf;
And bounteous His Grace beyond beyond count.
Tamil Meaning:
தலைவனாகிய சிவபெருமானது நடனம் புரிகின்ற திருவடிகளைத் துதியுங்கள். ஏனெனில், `ஞானக்கன்றுகளின் கூட்டம்` எனத் தக்க அடியார் கூட்டத்தின் நடுவே திரிந்துகொண்டிருப்பவனும், வானத்தில் வாழும் பசுக்கன்றுகளாகிய தேவர்களால் தொழப் படுபவனும் ஆகிய சிறப்பால் யானையை ஒத்த அடியவனுக்கே மறுமையில் சிவனது திருவருட் பெருக்கு உளதாகும்.Special Remark:
`கோன் நக்கன் தாய குரை கழல்` எனவும் `ஞானக் கன்று ஆய நடுவே` எனவும், `ஆனைக்கு அன்று` எனவும் கண்ணழித்து உரைக்க, ``உழிதரும், கைதொழும்` என்னும் பெயரெச்சங்கள் அடுக்கி, ``ஆனை`` என்னும் ஒருபெயர் கொண்டன. ``ஆனைக்கே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தல் பெற்றது. `அருள் பள்ளமாமே` எனவும் பாடம் ஓதுவர். `வள்ளமாமே` என்பது பாடமன்று.இதனால், கிரியையுள் தோத்திரம் சிறந்ததோர் உறுப்பாதல் கூறப்பட்டது. ``பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடி`` 1 என்றார் நாவுக்கரசரும்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage