
ஓம் நமசிவாய
The Next Song will be automatically played at the end of each song.
Tandhiram
Padhigam
- ஐந்தாம் தந்திரம் - 1. சுத்த சைவம்
- ஐந்தாம் தந்திரம் - 2. அசுத்த சைவம்
- ஐந்தாம் தந்திரம் - 3. மார்க்க சைவம்
- ஐந்தாம் தந்திரம் - 4. கடுஞ் சுத்த சைவம்
- ஐந்தாம் தந்திரம் - 5. சரியை
- ஐந்தாம் தந்திரம் - 6. கிரியை
- ஐந்தாம் தந்திரம் - 7. யோகம்
- ஐந்தாம் தந்திரம் - 8. ஞானம்
- ஐந்தாம் தந்திரம் - 9. சன்மார்க்கம்
- ஐந்தாம் தந்திரம் - 10. சகமார்க்கம்
- ஐந்தாம் தந்திரம் - 11. சற்புத்திர மார்க்கம்
- ஐந்தாம் தந்திரம் - 12. தாச மார்க்கம்
- ஐந்தாம் தந்திரம் - 13. சாலோக மாதி
- ஐந்தாம் தந்திரம் - 14. சாரூபம்
- ஐந்தாம் தந்திரம் - 15. சாயுச்சம்
- ஐந்தாம் தந்திரம் - 16. சத்திநிபாதம்
- ஐந்தாம் தந்திரம் - 17. புறச்சமய தூடணம்
- ஐந்தாம் தந்திரம் - 18. நிராசாரம்
- ஐந்தாம் தந்திரம் - 19. உட்சமயம்
Paadal
-
1. எளியநற் றீபம் இடல்மலர் கொய்தல்
அளியின் மெழுகல் அதுதூர்த்தல் வாழ்த்தல்
பளிபணி பற்றல் பன்மஞ்சன மாதி
தளிதொழில் செய்வது தான்தாச மார்க்கமே.
-
2. அதுவிது ஆதிப் பரமென் றகல்வர்
இதுவழி சென்றங் கிறைஞ்சின ரில்லை
விதிவழி யேசென்று வேந்தனை நாடும்
அதுவிதி நெஞ்சில் அளிக்கின்ற வாறே
-
3. அந்திப்பன் திங்கள் அதன்பின்பு ஞாயிறு
சிந்திப்பன் என்றும் ஒருவன் செறிகழல்
வந்திப்பன் வானவர் தேவனை நாடொறும்
வந்திப்ப தெல்லாம் வகையின் முடிந்ததே.
-
4. அண்ணலை வானவர் ஆயிரம் பேர்சொல்லி
உன்னுவர் உள்மகிழ்ந் (து) உள்நின் றடிதொழக்
கண்ணவன் என்று கருது மவர்கட்குப்
பண்ணவன் பேரன்பு பற்றிநின் றானே.
-
5. வாசித்தும் பூசித்தும் மாமலர் கொய்திட்டும்
பாசிக் குளத்தில்வீழ் கல்லாம் மனம் பார்க்கின்
மாசற்ற சோதி மணிமிடற் றண்ணலை
நேசித் திருந்த நினைவறி யாரே.