
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 12. தாச மார்க்கம்
பதிகங்கள்

அந்திப்பன் திங்கள் அதன்பின்பு ஞாயிறு
சிந்திப்பன் என்றும் ஒருவன் செறிகழல்
வந்திப்பன் வானவர் தேவனை நாடொறும்
வந்திப்ப தெல்லாம் வகையின் முடிந்ததே.
English Meaning:
All Worship Began From Chariya``I meditate on the Moon Nadi on the left,
I shift on to the Sun Nadi on the right``
—The worship the yogins thus
At the Feet of the One perform
And the worship the Celestial Beings,
Daily to Lord offer.
All these but begin
In the Path of Chariya ultimate.
Tamil Meaning:
நான் முதலில் இடநாடியின் வழியும், பின்பு வல நாடியின் வழியும் பிராண வாயுவை அடக்கியும், விட்டும் ஒப்பற்ற ஒருவனாகிய சிவனது திருவடிகளை என்றும் தியானிப்பேன். பின்பு அவனைப் புறத்திலும் சில இடங்களில் கண்டு வழிபடுவேன். இவை எல்லாமும் இங்குக் கூறிய தாசமார்க்கத்தில் இயன்றன.Special Remark:
அந்தித்தல் - அடக்குதல். இதனை, ``ஞாயிறு`` என்ப தற்கும் கூட்டுக. திங்கள் - சந்திர கலை. ஞாயிறு - சூரிய கலை. `மந்திர செபம், தியானம்` என்பவையும் பிராணாயாமத்தோடு கூடியவழிச் சிறந்து நிற்றலை முதல் இரண்டடிகளில் கூறியவாறு. புறத்தே சிவனை வழிபடும் இடங்களில் ஞாயிற்று மண்டலம் இங்கு முதற்கண் கொள்ளத் தக்கது. வகை, தாசமார்க்கமாதல் அதிகாரத்தால் பெறப்பட்டது. சரியை யாகிய தாசமார்க்கத்தில் நிற்போர் சமயதீக்கை பெற்று மூல மந்திர செபம், சதாசிவத் தியானம், கதிர் வழிபாடு என்பவற்றை நாள்தோறும் தவறாது செய்வராயின், அவரது சரியைத் தொண்டு பொதுவாய் ஒழியாது சிறப்பாய் விளங்கிப் பயன் தரும் என்றவாறு.இதனால், தாச மார்க்கம் சிறப்பு நிலை எய்துமாறு கூறப் பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage