ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. உணர்வொன் றிலாமூடன் உண்மைஓ ராதோன்
    கணுவின்றி வேதா கமநெறி காணான்
    பணிவொன் றிலாதோன் பரநிந்தை செய்வோன்
    அணுவின் குணத்தோன் அசற்குரு வாமே.
  • 2. மந்திரம் தந்திரம் மாயோகம் ஞானமும்
    பந்தமும் வீடும் தரிசித்துப் பார்ப்பவர்ச்
    சிந்தனை செய்யாத் தெளிவியாது ஊண் பொருட்டு
    அந்தகர் ஆவார் அசற்குரு வாமே.
  • 3. ஆமா றறியாதோன் மூடன் அதிமூடன்
    காமாதி நீங்காக் கலதி கலதிகட்கு
    ஆமாறச் சத்தறி விப்போன் அறிவிலோன்
    கோமான் அலன்அசத் தாகுங் குரவனே.
  • 4. கற்பாய கற்பங்கள் நீக்காமல் கற்பித்தால்
    தற்பாவம் குன்றும் தனக்கே பகையாகும்
    நற்பால் அரசுக்கும் நாட்டிற்கும் கேடாகும்
    முற்பாலே நந்தி மொழிந்துவைத் தானே.
  • 5. குருடர்க்குக் கோல்காட்டிச் செல்லுங் குருடர்
    மருளுற்றுப் பாழ்ங்குழி வீழ்வர்முன் பின்அக்
    குருடரும் வீழ்வர்கள் முன்பின் அறவே
    குருடரும் வீழ்வார் குருடரோ டாகிலே.