
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 34. அசற்குரு நெறி
பதிகங்கள்

கற்பாய கற்பங்கள் நீக்காமல் கற்பித்தால்
தற்பாவம் குன்றும் தனக்கே பகையாகும்
நற்பால் அரசுக்கும் நாட்டிற்கும் கேடாகும்
முற்பாலே நந்தி மொழிந்துவைத் தானே.
English Meaning:
The False Guru is an Enemy to Himself and WorldIf without driving away
The illusory thoughts
That imagination breeds,
A teacher teaches,
He will in divinity lose faith;
Like his own self an enemy be;
For the king and the kingdom an evil be;
—Thus hath Nandi of yore declared.
Tamil Meaning:
சற்குருவாவான் தன்னை அடைந்த மாணாக்க னிடத்தில் உள்ள குற்றங்களை முதலில் நல்லனவற்றைக் கூறும் முறையால் நீக்கி அதன் பின்பே ஞானத்தை உணர்த்துதல் வேண்டும். அவ்வாறு செய்யாமலே ஞானத்தை உணர்த்தினால் தனது ஆசிரியத் தன்மையுங் கெட்டுத் தனது செய்கையே தனக்குத் தீங்காய் முடியும். அதனால் நாட்டில் புல்லரே தலையெடுப்பர் ஆதலின் அரசு நல்லரசாய் இருப்பினும் அதற்கும் கேடு விளையும். நாடும் தீய நாடாகி விடும். இதனைப் படைப்புக் காலத்திற்றானே சிவன் தனது ஆகமங்களில் சொல்லி வைத்துள்ளான்.Special Remark:
கற்பு - கல்வி. அது பின்னர் அம்முப்பெற்று, ``கற்பம்`` என நின்றது. `கல்வியாகிய கல்வி` என்றது, ஆசிரியர் கற்பியாது அவர் தாமே கற்ற சொந்தக்கல்வி` எனக் குற்றங்களைக் குறித்துநின்றது. குணம்போலக் குற்றம் பிறர்கற்பிக்க வேண்டாதுதானே தோன்றி வளர்வதாதலை அறிக. பாவம் - தன்மை. தனக்குத் தீங்காதலாவது, உணர்த்தப்பெற்றோரால் நன்கு மதிக்கப்படாமையும், உலகரால் பழியும் அடைதல்.இதனால், கலதிகட்கு ஆமாறு அறிவிப்போர் அடையும் குற்றம் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage